கன்னியாகுமரியில் Stainless Steel Glass Bridge - ரூ.37 கோடி மதிப்பீட்டில்

கன்னியாகுமரியில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் Stainless Steel மூலமாக காண்பவர்களை கவர்ந்திடும் வகையில் கண்ணாடி பாலமானது (Stainless Steel Glass Bridge) அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலமானது அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியவற்றை இணைக்கும். இப்பாலத்தின் பணிகளை களஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு இப்பணிகளை வருகின்ற டிசம்பர் 2024க்குள் முடிக்க வேண்டும் என்றும், இனிமேலும் காலதாமதம் ஆனது செய்யாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வேகமாக தயாராகி வரும் Stainless Steel Glass Bridge :

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியின் கடலுக்குள் அமைந்திருக்கும் பாறைக்கு நீந்திச் சென்று, அந்த பாறை மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்துள்ளார். அந்த நினைவாக சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆனது இந்தப் பாறையில் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறையின் அருகில் உள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை ஆனது 2000 ஜனவரி 1ம் தேதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடி பாலமானது (Stainless Steel Glass Bridge) திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறையில் பொதுப்பணித்துறையின் மூலம் தற்போது நடைப்பெற்று வருகின்ற ரூ.33 கோடி செலவில்  இரண்டு படகு நிற்கும் இறங்கு தள விரிவாக்கப் பணிகளையும் களஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பிற பொதுப்பணித்துறை பணிகள் :

அமைச்சர் எ.வ.வேலு கன்னியமாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மேற்பார்வையில் நடைப்பெற்று வருகின்ற பிற பணிகளையும் களஆய்வு செய்தார்.

  • கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கோழிவிளை மங்காடு சாலையை, 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை ஆனது எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். இச்சாலையில் போக்குவரத்துச் செறிவு மற்றும் சாலையின் அகலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு ஆனது எடுக்கப்பட்டுள்ளது.
  • மார்த்தாண்டம், பம்மம் பகுதியில் உள்ள பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை குறுகலாக உள்ளதால் தேவையான அகலத்திற்கு நிலஎடுப்பு மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யப்பட உள்ளது.
  • இரனியல் சந்திப்பில், 1 கிலோ மீட்டர் நீளமுள்ள மண்டே மார்க்கெட் சாலை, குறுகிய சாலையாக உள்ளதால், விரிவாக்கம் செய்ய நிலஎடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு நிலஎடுப்பில் காலதாமதம் மற்றும் நிலஎடுப்பில் உள்ள பல்வேறு இடையூறுகளையும் கருத்தில் கொண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக அனைத்து பாலங்களையும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply