Stamp Duty And Registration Charges 2023 : பத்திரப்பதிவுக்கான கட்டணங்கள் குறைகிறதா?

Stamp Duty And Registration Charges 2023 - 2 மடங்கு கட்டணம் உயர்வு :

தமிழகத்தில் பல வருடங்களாக பத்திர பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த வந்த நிலையில், அதன் ஒருபகுதியாக சமீபத்தில்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை தமிழக அரசானது ‘டபுள்’ மடங்காக உயர்த்தியிருந்தது. பாகப்பிரிவினை, பொது அதிகாரம், செட்டில்மென்ட், கட்டுமான ஒப்பந்தம் போன்ற பல்வேறு பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை எற்படுத்தியது. இந்நிலையில்தான் தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் 9% சதவீதம் வசூல் செய்யப்படும் (Stamp Duty And Registration Charges 2023) என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக்கட்டணத்தையும் (Stamp Duty And Registration Charges 2023) தமிழக அரசு உயர்த்தியிருந்தது. உதாரணமாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இந்த கட்டண உயர்வால் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணமானது 2 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது நடுத்தர மக்களை பெரிய அளவில் பாதித்து வருகிறது. இந்த கட்டணங்களை குறைக்க சொல்லி அரசுக்கு வேண்டுகோள் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்த இன்னொரு கோரிக்கையும் தற்போது வெளியாகி உள்ளது. ‘சிங்கார சென்னை’ கட்டுனர் சங்க தலைவர் அனிபா அவர்களும், செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியிருப்பதாவது.

பத்திரபதிவுக்கட்டணம் குறைக்க கோரிக்கை :

சமீபத்தில் உயர்த்திய பத்திரபதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்களுடைய குறைகளை பரிவுடன் கேட்டு நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த ‘பத்திர பதிவுத்துறை அமைச்சர்’ திரு.மூர்த்தி அவர்களுக்கும் மேலும் அதில் கலந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் ‘சிங்கார சென்னை’ கட்டுனர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு போன்ற பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மீண்டும் மறு மதிப்பாய்வு செய்வது சம்பந்தமாக உடனடி தீர்வு காணும்படி மாண்புமிகு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான பணி தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது “இன்வெஸ்டர்ஸ்” (Investors) எனப்படும் முதலீட்டாளர்கள். இன்வெஸ்டர்ஸ் கட்டுமான திட்டங்களில் தங்களது முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து தங்களது லாபத்தை எடுத்து கொள்வார்கள். அவர்களுக்கு உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணமானது முதலீட்டில் பெரிய பாதிப்பினை எற்படுத்தியுள்ளது.

பத்திரப்பதிவு (Registration) :

Stamp Duty And Registration Charges 2023  : முன்பு ‘பவர் ஆப் அட்டர்னி’ போன்ற பரிவர்த்தனைகளுகான கட்டணம் ரூ.10,000 ஆக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி சொத்தினுடைய சந்தை மதிப்பில் சுமார் 1% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரங்கள் அடிப்படையிலும் மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டணத்தை ரூ.20,000, ரூ.25,000 ஆக மாற்ற அரசானது பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1% சதவீதத்திலிருந்து 3% சதவீதமாக உயர்த்தியதை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். கட்டணத்தை அதன் முந்தைய விகிதத்தில் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று ‘சிங்கார சென்னை’ கட்டுனர் சங்கமானது தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply