Star 3.0 : ஆபீசுக்கு போகாமல் பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு வழி

தமிழக அரசின் பதிவுத்துறை ஆனது பொதுமக்களின் வசதிக்காகவும் மற்றும் நலனுக்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை ஹைகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் 28/11/2023 அன்று வழக்கு ஒன்றை விசாரித்து முடித்து உத்தரவை பிறப்பித்தபோது, ”சாப்ட்வேர் 2.0-விற்கு பதிலாக சாப்ட்வேர் 3.0 (Star 3.0)மென்பொருளாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் 8 வாரங்களில் இதை முடிக்க வேண்டும்” என்று கூறினார். தமிழக அமைச்சர் மூர்த்தி தற்போது சாப்ட்வேர் 3.0 (Star 3.0) மென்பொருள் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் 30/11/2023 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கம் :

சென்னையில் 30/11/2023 அன்று தற்போதுள்ள ஸ்டார் – 2.0 சாப்ட்வேரை மேம்படுத்தும் வகையில், Star 3.0 சாப்ட்வேர் தயாரிக்க தமிழக அரசு ஆனது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் குறித்து ஆலோசனை பெறுவதற்கான கருத்தரங்கம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியபோது கடந்த 2000ம் ஆண்டில் பத்திரப்பதிவில் கணினிமயமாக்கலுக்காக ஸ்டார் திட்டம் துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, ஸ்டார் 2.0 சாப்ட்வேர் ஆனது பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பயன்பாட்டு நிலையில் தெரியவந்த விஷயங்கள், மக்களின் தேவைகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு Star 3.0 சாப்ட்வேர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வல்லுனர் குழுக்கள் அமைத்து இதற்கான பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் இந்த கருத்தரங்கம் ஆனது தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக நடத்தப்பட்டது.

Star 3.0 - பத்திரப்பதிவு ஆபீசுக்கு போகவே வேணாம் :

பொது மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமலேயே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் புதிய வழிமுறைகளை அமல்படுத்தி பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு வழி செய்யப்படும். புதிய சாப்ட்வேர் Star 3.0 சாப்ட்வேரை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் இது செயல்படுத்தப்படும். மக்கள் பதிவுத்துறை சேவைகளை பெற செல்போன் செயலி உருவாக்கப்படும். எங்கிருந்தும்  தரவுகளை (Messages) எளிதாக பயன்படுத்தும் வகையில் “கிளவுட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தபடும் என்றார்.

சாப்ட்வேர் 3.0 மென்பொருளாக மாற்ற எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் :

சார் பதிவாளர் அலுவலகங்களில் உள்ள  1975 முதல் பதிவான பத்திரங்களை சரியான முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு “Star 3.0” சாப்ட்வேர் தொகுப்பில் பதிவேற்றம் ஆனது செய்ய வேண்டும். இப்படி பதிவேற்றம் ஆனது செய்யப்படுகின்ற போது ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருப்பது தெரிய வந்தால் அது குறித்து உடனடியாக   மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் சரியான முறையில் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு ஸ்கேன் தொகுப்பு ஆனது அனுப்பப்பட வேண்டும். பின்பு மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் உள்ள சார் பதிவாளர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். பதிவுத்துறை சேவைகளை மக்கள் பெற செல்போன் போன் செயலி உருவாக்கப்பட வேண்டும். எங்கிருந்தும் எளிதாக தரவுகளை (Messages) பயன்படுத்தும் வகையில் “கிளவுட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்றார்.

பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிக்கை :

பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி “Star 3.0” சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு சில மாதங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே நீதிமன்றங்களுக்கு அனுப்பிய ஆவண தொகுதிகள், விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பிய ஆவண தொகுதிகள், சிதிலமடைந்த ஆவண தொகுதிகள் மற்றும் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஆவண தொகுதிகள் தொடர்பாக  சார் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை சார் பதிவாளர்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply