Star Engulfing Jupiter-Sized Planet: கிரகத்தை விழுங்கும் வியாழன் அளவிலான நட்சத்திரம்

வியாழன் அளவிலான கிரகத்தை அதை   சூழ்ந்திருக்கும் ஒரு நட்சத்திரம் ஆனது விழுங்குவதை இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டதாக கூறியுள்ளனர்.

சூரியனைப் போன்ற  அளவிலான ஒரு  நட்சத்திரம் ஆனது  முதல் முறையாக ஒரு கிரகத்தை விழுங்குவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர், மேலும் இந்த நிகழ்வு ஆனது  5 பில்லியன் ஆண்டுகளில் பூமி இதே போன்ற கதியை சந்திக்கும் என்ற விஞ்ஞானிகள் கணிப்பை உறுதிப்படுத்துகிறது.  மேலும்  பழைய நட்சத்திரங்கள்  ஆகியவை அவற்றின்  அருகிலுள்ள கிரகங்களான புதன், வீனஸ்  போன்றவற்றை இறுதியில் உட்கொள்ளக் கூடும் எனவும் அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது.

MIT, Harvard University மற்றும் Caltech ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மே 2020 இல் கிரகத்தை உண்ணும் நட்சத்திரத்தை  Zeeviky Transient Facility (ZTF) மூலம் கண்டுபிடித்தனர்.  மே 2020 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிகழ்வைத் தொடர்ந்து ஒரு கிரகத்தின் மரணத்தை உறுதிப்படுத்தியது. முதன்முதலில், நமது விண்மீன் மண்டலத்தில் வீங்கிய நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்குவதை விஞ்ஞானிகள் கண்டனர்.

MITயின் Kavli Institute for Astrophyscics and Space Research-சின் முன்னணி எழுத்தாளர் De. Kishalay, ” விழுங்கலின் இறுதிக் கட்டத்தை விஞ்ஞானிகள் ஆகிய நாங்கள் பார்த்தோம். பூமியின் எதிர்காலத்தை விஞ்ஞானிகள் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

கிரகத்தை உண்ணும் நட்சத்திரத்தை MIT, Harvard University மற்றும் Caltech ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மே 2020 இல் Zwicky Transient Facility (ZTF) மூலம் மே 2020 இல் இந்த வெடிப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த போதிலும் அதன்பின் அந்த வெடிப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான விளக்கத்தை மற்றும் என்ன நடக்கிறது என்பதை ஒன்றாக இணைக்க விஞ்ஞானிகளுக்கு இன்னும் 12 மாதங்கள் ஆனது.

இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு ஆனது வியாழன் அளவிலான கிரகத்தை நட்சத்திரம் சூழ்ந்திருப்பதை பார்த்தது. ZTF SLRN-2020 என்ற சூரியனைப் போன்ற அளவிலான நட்சத்திரம் ஆனது வியாழன் அளவிலான கிரகத்தை விழுங்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  கழுகு போன்ற விண்மீன் கூட்டமான அக்விலாவிற்கு அருகில்  பூமியிலிருந்து சுமார் 12,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரக விருந்துநடந்ததாக நம்பப்படுகிறது.

நட்சத்திரங்கள் முழு கிரகங்களையும் உட்கொள்வதற்கு முன்பும்,  முழு கிரகங்களையும் உட்கொண்ட சிறிது நேரத்திற்குப் பிறகும் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட,  சமீபத்திய கண்டுபிடிப்பான இந்த கிரக அழிவு நமது சொந்த நட்சத்திர மண்டலத்தில், சுமார் 12,000 ஒளி ஆண்டுகள் தொலைவில், கழுகு போன்ற  நட்சத்திர கூட்டத்திற்கு அருகில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.  வானியலாளர்கள் 10 நாட்களில் 100 மடங்கு பிரகாசமாக வளர்ந்த ஒரு நட்சத்திரத்திலிருந்து ஒரு வெடிப்பை கண்டுபிடித்தனர். அந்த வெடிப்பு ஆனது  விரைவாக மறைந்துவிடும். இந்த வெள்ளை-ஹாட் ஃபிளாஷ் விசித்திரமான முறையில் குளிர்ச்சியான, நீண்ட கால சமிக்ஞையால் ஏற்பட்டது.  இந்த கலவையானது ஒரு நட்சத்திரம் அருகிலுள்ள கிரகத்தை விழுங்கும் ஒரே ஒரு நிகழ்வின் விளைவாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சிகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதியில் பழைய நட்சத்திரங்கள், அருகிலுள்ள கிரகங்களை (நமது சூரியனைப் பொறுத்தவரை புதன், வீனஸ் போன்றவை) உட்கொள்வதும் அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது. ஆனால் ஒரு கிரகத்தின் மரணத்தை நிரூபிக்கும் சோதனை ஆதாரங்களை வழங்குவது மிகவும் சவாலானதாகக் கருதப்பட்டது” என்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியர்   De. Kishalay, The Indian Express உடன் e-mail மூலம் பகிர்ந்து கொண்டார். சூரியனின் எரிபொருள் சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில்  தீர்ந்துவிடும் போது பூமி மூழ்கிவிடும் என்றார்., ”என்று மேலும் கூறினார்.

இந்த கிரகம் வெப்பமான, வியாழன் அளவிலான கிரகமாக இருக்கலாம் என்றும் அது  இறக்கும் நட்சத்திரத்தின் அருகே நெருக்கமாகச் சுழன்று, பின்னர் இறக்கும் நட்சத்திரத்தின் வளிமண்டலத்தில் அதன் மையப்பகுதிக்குள் இறுதியாக இழுக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள்  மதிப்பிட்டுள்ளனர். 

Cambridge University, Califorenia Institute of Technology, Massachuttes Institute of Technology (MIT),  Harvard மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் குழு எல்லாம்  இணைந்து ஒரு கூட்டு ஆய்வு மேற்கொண்டு மே 2020-ல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வை ஒரு கிரகத்தின் மரணம் என்று உறுதிப்படுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் ஆனது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது

இந்திய விஞ்ஞானி கண்டறிந்த “Star Engulfing Jupiter-Sized Planet” இன்றிலிருந்து ஐந்து பில்லியன் ஆண்டுகளில் பூமியும் இதேபோன்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும்  மற்றும் குறைந்தபட்சம் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு இது நடக்காது என்றாலும், இந்த ஆய்வு ஆனது விஞ்ஞானிகளுக்கு ஒரு கிரகத்தின் வாழ்க்கையின் இறுதி தருணங்களைப் படிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கி உள்ளது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Antony

    It is interesting.

Leave a Reply