Starving Gazans : காசா மக்களுக்கு உணவளிக்க சென்ற ஐ.நாவின் உணவு லாரி தடுத்து நிறுத்தப்பட்டது

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 150 நாட்களை கடந்த நிலையில் காசா மக்களின் வாழ்க்கை நிலை ஆனது மிகவும் கவலை அளிக்கிறது. இதுவரை சுமார் 30,631 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (12,300 குழந்தைகள் மற்றும் 8,400 பெண்கள்). படுகாயம் அடைந்தவர்களின் 72,043 பேர் பட்டியலில் 8,663 குழந்தைகள் மற்றும் 6,327 பெண்கள் அடங்குவர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர்.

Starving Gazans - பட்டினியில் தவிக்கும் வடக்கு காசா மக்கள்

உள்கட்டமைப்பு வசதிகள் ஆனது வடக்கு  காசாவில் தரைமட்டமாகி கிடப்பதால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பாலஸ்தீனிய மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் மிகவும் பரிதாப  நிலை (Starving Gazans) ஆனது ஏற்பட்டுள்ளது. வடக்கு காசா மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாலஸ்தீனிய மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பசி, பட்டினியால் தவிக்கும் காசாவிற்கு (Starving Gazans) உதவிக்கரம் நீட்ட ஐக்கிய நாடுகள் சபையும் மற்றும் பல்வேறு உலக நாடுகளும் முன்வந்துள்ளன.

மக்களுக்கு உணவளிக்க சென்ற ஐ.நாவின் உணவு லாரி தடுத்து நிறுத்தப்பட்டது

பட்டினியால் தவித்து வரும் மக்களுக்கு தேவையான உணவை வழங்க ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 ட்ரக்குகள் மூலம் உணவுகள் கொண்டு செல்லப்பட்டது. வடக்கு காசாவை நோக்கி பயணம் செய்த 14 ட்ரக்குகள் காசா சோதனைச் சாவடிக்கு வந்த போது ட்ரக்குகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தியது. பசியால் தவித்து (Starving Gazans) வரும் வடக்கு காசா மக்களுக்கு உணவளிக்க சென்ற ஐ.நாவின் உணவு லாரி இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஆனது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் வடக்கு காசாவில் மக்கள் பட்டினியால் மணிக்கணக்காக (Starving Gazans) தவித்தனர். ஐ.நாவில் இருந்து நாங்கள் உணவு அளிக்க வந்துள்ளோம், வடக்கு காசா மக்களுக்கு உணவு இல்லை என்றும், பசியால் வாடி கொண்டிருக்கின்றனர் என்று கெஞ்சி எடுத்துரைத்த போதிலும் இஸ்ரேல் ராணுவம் விடவில்லை. ஐ.நா சேவகர்கள் பல மணி நேரம் போராடியும் முயற்சி பலன் அளிக்காததால் சுமார் 3 மணி நேரம் அதே இடத்தில் காத்திருந்து ஏமாற்றத்துடன் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டனர். ஐ.நா சேவகர்கள் மாற்று வழியில் செல்ல யோசித்து புதிதாக ஒரு வழித் தடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து மாற்று வழியில் ஐ.நாவின் உணவு லாரிகள் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய அளவில் வடக்கு காசா மக்கள் கூட்டம் ஐ.நாவின் உணவு லாரிகளை நோக்கி ஓடியது.

அந்த வடக்கு காசா மக்கள் தங்களுக்கு உணவு இல்லை என்றும், பசியால் வாடிக் கொண்டிருக்கிறோம் என்று கெஞ்சியுள்ளனர். ஐ.நா சேவகர்கள் வடக்கு காசா மக்களிடம் 200 டன் உணவு பொருட்களை கொடுத்து விட்டு ஐ.நா ட்ரக்குகள் திரும்பியுள்ளன. காசாவின் சாலைகள் இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. காசாவின் உட்புறமாக பயணிக்க போதிய சாலை வசதிகள் இல்லாததால் ட்ரக்குகள், லாரிகள் மூலம் தட்டு தடுமாறி உணவுப் பொருட்கள் கொண்டு சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சாலை மார்க்கமாக செல்வது மிகவும் சிரமம் என்பதால் வான்வெளியாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் செயலுக்கு கண்டனங்கள் ஆனது குவிந்து வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply