Steve Smith Scores 32nd Test Hundred: யார் நம்பர் 1 என காட்டிய ஸ்மித்… லார்ட்ஸ் மைதானத்தில் சோலோ சம்பவம்!
இரண்டாவது டெஸ்ட்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அசத்தலான சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது 32 வது சதத்தினை பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏன் என்றால் கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்துக்கு விளையாட வரும் போது அவர் மட்டும் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோப்பையை வென்று இருந்தார். அது மட்டும் அல்லாமல் கடைசி ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்சிலும் 16 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் புதிய பந்தில் இங்கிலாந்து அணி வீசும் என ஆஸி. ரசிகர்கள் பீதியுடன் ஆட்டத்தை பார்த்தனர். அதன் படி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 22 ரன்களிலும், ஸ்டார்க் 6 ரன்களிலும் வெளியேறினர்.
Steve Smith Scores 32nd Test Hundred
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கம்மின்ஸை ஒரு பக்கம் தள்ளி வைத்து ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்தார். அவரது பேட்டிலிருந்து பவுண்டரிகள் அடித்துக்கொண்டே இருந்தன. இங்கிலாந்தின் அனுபவமிக்க ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோர் சதம் அடிப்பதைத் தடுக்கும் வகையில் தாக்குதலுக்குள்ளாகினர். ஆனால் சலிக்காமல், ஸ்டீவ் ஸ்மித் தனது 32வது சதத்தை எட்டினார்.
இங்கிலாந்து மண்ணில் ஸ்டீவ் ஸ்மித்தின் 8வது சதம் இதுவாகும். இது தவிர, குறுகிய இன்னிங்சில் 32 சதங்கள் அடித்த சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதுவரை 99 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்டீவ் ஸ்மித் வெறும் 174 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங் மற்றும் பலர் உள்ளனர். அதேபோல் விராட் கோலி 185 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள் அடித்துள்ளார்.