STR 48 First Look : சிம்புவின் "STR 48" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை பிப்ரவரி 3 ஆம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது வரவிருக்கும் படமான STR 48 இன் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (STR 48 First Look) இப்போது வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். பாகுபலிக்கு பிறகு, இந்திய சினிமா வரலாற்றுடன் தொடர்புடைய போர் வீரர்களை மையமாக வைத்து பிரமாண்ட படங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. எத்தனை கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டாலும், அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பதால், அந்த வகை படங்களை எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா தமிழ் சினிமாவின் பாகுபலி ரேஞ்சுக்கு ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமான போர் வீரன் லுக்கில் சூர்யா நடித்துள்ள நிலையில், சிம்பு அதேபோன்ற பிரமாண்டமான படத்தை செய்ய முன் வந்துள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 21 படத்தை தயாரித்து முடித்த கமல்ஹாசன், தற்போது சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் ஆகியோருடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தேசிங் பெரியசாமி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் தான் எஸ்டிஆர் 48.

STR 48 First Look :

நடிகர் சிம்பு நெகட்டிவ் ரோலில் நடித்தால் படம் பட்டையை கிளப்பும், எஸ்டிஆர் 48 படத்தில் வில்லன் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், ​​சிம்புதான் வில்லன் என்று யூகித்துக்கொண்டிருந்தோம். தற்போது  சிம்பு இரட்டை வேடங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் டி.ராஜேந்தரின் மகன் சிம்பு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

இன்று அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு STR 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (STR 48 First Look) வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் ஏமாற்றிவிட்டனர். படப்பிடிப்பு முடிவடையும் வேளையில் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (STR 48 First Look)  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply