Success History Of VGN Company : ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள VGN

நான்காம் தலைமுறையாக வெற்றிநடை போடும் VGN நிறுவனம் :

1942 இல் நிறுவப்பட்ட VGN நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் (Success History Of VGN Company) பிடித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் குருசாமி என்பவர் VGN என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு சிறிய செங்கல்சூளை ஒன்றைத் தொடங்கினார். அனைவரும் கட்டுமானத்துக்கு நம்பிக்கையுடன் வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு சிறந்த செங்கற்களைத் தயாரிக்கும் நிறுவனமாக VGN பெயரெடுத்தது. 83 ஆண்டுகளாக எப்போதும் வெற்றிகரமாக இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 83 ஆண்டுகளில் குடியிருப்பு மேம்பாடுகளில் மலிவு விலை, பிரீமியம் குடியிருப்புகள், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக இடங்கள், சில்லறை வணிகம் மற்றும் தொழில்துறை கிடங்குகள் ஆகியவற்றில் VGN நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதுவரை VGN ஆனது 250+ கட்டிடங்களை நிறைவு செய்து ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ முழுவதும் 20 மில்லியன் சதுர அடிக்கு மேல் நிறைவு செய்துள்ளது. தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் ISO 9001-2008 சான்றளிக்கப்பட்ட VGN நிறுவனமானது அதன் அழகிய, உலகத் தரம் வாய்ந்த வீடுகளுக்குப் பெயர் பெற்றுள்ளது. லாயிட்ஸ் பதிவேட்டால் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (IMS) சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ISO 14001:2004 தரச்சான்றிதழைப் பெற்றிருக்கிறது. கிரெடாய் (Confederation Of Real Estate Developers Association Of India – CREDAI), பி.ஏ.ஐ (Builders Association Of India – BAI), TNPPA போன்ற ரியல் எஸ்டேட் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பகமான நிறுவனமானவும் திகழ்கிறது. மார்ச் 31, 2024 அன்று முடிவில் VGN Projects Estates pvt Ltd. இன் செயல்பாட்டு வருவாய் வரம்பு சுமார் INR 100 cr – 600 cr ஆகும்.

Success History Of VGN Company :

Success History Of VGN Company :

குருசாமிக்குப் பிறகு திரு.வி என் தேவதாஸ் அவர்கள் வி.ஜி.என் சேர்மன், மற்றும் அவரது மகள் திருமதி. அனுஷா அஷ்யந்த் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றனர். UK கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு.பிரதீஷ் வேதப்புடி 2008 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைந்தார். திரு.பிரதீஷ் பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டும் குழுவின் உள்கட்டமைப்பு பிரிவை  அமைத்தார்.

திரு.பிரதீஷ், 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்து மேம்பாடு மற்றும் பெரிய குடியிருப்பு திட்டங்களை உருவாக்குவதன் மூலம் தனது கனவை செயல்படுத்த விரும்பினார். அவரது தலைமையின் கீழ், VGN குழுமம் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களையும் 600 ஏக்கருக்கு மேல் 20,000 குடியிருப்பு மனைகளை உள்ளடக்கிய மேம்பாட்டையும் முடித்துள்ளது. VGN சுமார் 10,500 வீடுகளை வழங்கியுள்ளது மேலும் 1500 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன.

VGN இதுவரை சுமார் 240-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட்  திட்டங்களை முடித்து 800-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் மனைப்பிரிவுகளாகவும், 20 மில்லியன் சதுர அடியில் வீடுகளாகவும் வழங்கி வெற்றிகரமாக (Success History Of VGN Company) செயல்பட்டுள்ளது. மேலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்பெற்றுள்ளனர். திரு.பிரதீஷ், “அடுத்த 20 வருட வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டுதான் நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் தொடங்குகிறோம். வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் மதிப்புக்கு அதுதான் காரணம். எல்லோருக்கும் வீடு இருக்கணும்ங்குறதுதான் எங்கள் கனவு” என்கிறார்.

Latest Slideshows

Leave a Reply