Success Journey Of Pothys : நான்காம் தலைமுறையைக் கண்டுள்ள போத்தீஸ் நிறுவனத்தின் வெற்றிப் பயணம்

போத்தீஸ் ஆனது வில்லிபுத்தூரில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட துணிக்கடை ஆகும். திருநெல்வேலியில் 1986-ல் போத்தீஸ் ஆனது அதன் அடுத்த கிளையைத் தொடங்கியது. அது போத்தீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆரம்பம் ஆகும். போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷின் மகன் வருண் மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரும் இந்த நிறுவனத்தில் தற்போது இயக்குநர்களாக உள்ளனர்.

Success Journey Of Pothys - நிர்வாக இயக்குநர் ரமேஷின் அப்பா சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி என 18 கிளைகள் கொண்ட நிறுவனமாக டெவலப் செய்துள்ளார் :

சிறிய அளவில் தொடங்கப்பட்ட போத்தீஸ் துணிக்கடையை மிகப்பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்பது போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷின் பெரியப்பாவின் கனவு ஆகும். அதை நோக்கியே ரமேஷின் அப்பா மற்றும் பெரியப்பா இயங்க ஆரம்பித்தார்கள். வில்லிபுத்தூரில் இருந்த கடையில் நிறைய மாற்றங்களை அவர்கள் இருவரும் கொண்டு வந்தார்கள். போத்தீஸ் துணிக்கடையின்  தரமும் வெரைட்டியும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். அதே நம்பிக்கையில் 1986-ல் திருநெல்வேலியில் தங்களுடைய அடுத்த கிளையைத் தொடங்கினார்கள். அது அவர்களுடைய மிகப்பெரிய ஆரம்பம் ஆகும்.

போத்தீஸ் நிறுவனம் நான்கு தலைமுறைகளை கண்டுள்ளது என்று சொன்னாலும், நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையான நிர்வாக இயக்குநர் ரமேஷின் அப்பா மற்றும் அவர்களின் சகோதரர்கள் எடுத்த முயற்சிதான் நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது என்று சொல்லலாம். அந்த நம்பிக்கையில் 1986-ல் திருநெல்வேலியில் தொடங்கிய கிளையில் எல்லா வகையான துணி வகைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்தது தொடங்கி, பிரமாண்டம் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தது வரை அந்தக் கடைக்கு ரமேஷின் அப்பா கையாண்ட விளம்பர யுக்தி, துணியின் தரம், வெரைட்டி எல்லாம் மக்களோட பெரிய ஆதரவை போத்தீஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கச் செய்தது. நிர்வாக இயக்குநர் ரமேஷின் அப்பா டெவலப் செய்வதில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த ஊரில் கிளைகள் தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை தன் சகோதரர்களுடன் சேர்ந்து முடிவெடுத்ததால் இன்று சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி என 18 கிளைகள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.

நிர்வாக இயக்குநர் ரமேஷின் சிறு வயதிலே பிசினஸ், வியாபாரம் பற்றியெல்லாம் விளங்க ஆரம்பித்துவிட்டது :

நிர்வாக இயக்குநர் ரமேஷின் சிறு வயதில் விடுமுறை நாள்களில் திருநெல்வேலி போத்தீஸ் கடைக்கு சென்று அப்பாவுடன் இருந்து அப்பா எடுக்கும் அதிரடி முடிவுகளைப் பார்த்து வளர்ந்ததால் அவருக்கு பிசினஸ், வியாபாரம் பற்றியெல்லாம் சிறுவயதிலேயே விளங்க ஆரம்பித்துவிட்டது. எந்த சூழ்நிலையிலும் ரமேஷின் அப்பா தான் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கியதே இல்லை. வியாபார விஷயத்தில் முயற்சி செய்யாமல் ‘நோ’ சொல்லக் கூடாது என்பார். ரமேஷின் 84 வயது தாத்தா சடையாண்டி 200% உழைக்கும் நபர். அவர் இப்போதும் வியாபாரம் குறித்த சிந்தனையுடன் வாரத்துக்கு நான்கு நாள்கள் கடைகளுக்குச் சென்று கடையை மேற்பார்வை செய்கிறார்.

போத்தீஸ் நிறுவனத்தின் புது முயற்சி தங்க நகை வியாபாரம் :

நிறுவனத்தின் மற்றொரு புது முயற்சி தங்க நகை வியாபாரம். அடுத்தடுத்து புது இலக்கை நோக்கி முயற்சிகளுடன் போத்தீஸ் ஆலமரமாக விரியும் இலக்கை (Success Journey Of Pothys) கொண்டுள்ளது. எப்போதும் போத்தீஸ் நிறுவனம் மார்க்கெட்டிங் சார்ந்து நிறைய புதுப்புது முயற்சிகள் செய்துகொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் எப்போதும் தக்கவைக்க புதுப்புது வெரைட்டிகள், டிரெண்டுகளை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply