Success Of HCL CEO Roshni Nadar : உலகின் 5-வது பணக்கார பெண்மணி ரோஷ்னி நாடாரின் வெற்றி பயணம்

HCL Technologies நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா உலகின் 5-வது பணக்கார பெண்மணியாக (Success Of HCL CEO Roshni Nadar) பட்டியலிடபட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல், கார்ப்ரேட் உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு இந்தியாவின் சிறந்த பணக்காரப் பெண்கள் பட்டியலை Kotak Private Banking Hurun வெளியிடுகிறது. இப்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அதன் மூன்றாவது பதிப்பில் இரண்டாவது முறையாக HCL ரோஷினி நாடார் இடம்பெற்றுள்ளார்.

HCL Technologies இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் என்பவரின் இந்த HCL Technologies நிறுவனம் சர்வதேச அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில்தான் ஷிவ் நாடார் HCL Technologies நிறுவனத்தில் தனது 47% பங்குகளை ரோஷ்னி நாடாருக்கு மாற்றினார். ஷிவ் நாடார் HCL தலைமைப் பொறுப்பை (CEO and Managing Director of HCL Corporation மற்றும் Vice Chairman of HCL Technologies) தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை வியூக அதிகாரியாக தனது பொறுப்பில் தொடர்கிறார்.

Success Of HCL CEO Roshni Nadar - Platform Tamil

ரோஷ்னி நாடார் பற்றிய சில முக்கிய தகவல்கள் (Success Of HCL CEO Roshni Nadar)

38 வயதான HCL Technologies தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா HCL ஷிவ் நாடார் அவர்களின் ஒரே மகள் ஆவார். டெல்லியில் வளர்ந்த அவர் Vasant Valley School-லில் பள்ளிப்படிப்பை (Success Of HCL CEO Roshni Nadar) முடித்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் (North-Western University of Illinois) வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சார்ந்த தகவல்தொடர்புகளைப் (Radio, Television and Film Based Communication) படித்தார். பின்னர் ரோஷ்னி நாடார் Kellogg School of Management-ல் சேர்ந்து வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்தியாவில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரிந்த பிறகு தனது தந்தை ஷிவ் நாடாரின் HCL கார்ப்ரேஷனின் CEO மற்றும் நிர்வாக இயக்குநராகவும், HCL டெக்னாலஜியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் Shiv Nadar Foundation மற்றும் VidyaGyan Leadership Academy-யின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து HCL நிறுவனத்துடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2013-ல் HCL Technologies-ன் Additional Director-ராகப் பொறுப்பேற்றார்.

அவர் 2023-ல் The Habitats Trust என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார். அவர் வனவிலங்குகளைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். அவர் 2017 முதல் 2019 வரை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் (Success Of HCL CEO Roshni Nadar) இடம்பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் ரூ.36800 கோடியுடன் 54-வது இடத்தைப் பிடித்தார். உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் HCL ரோஷ்னி நாடார் பெற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply