Infosys இணை-நிறுவனருடைய மனைவி Sudha Murthy Appointed As Rajya Sabha MP

இன்ஃபோசிஸ் இணை-நிறுவனருடைய மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக (Sudha Murthy Appointed As Rajya Sabha MP) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி பெண் சக்திக்கு சான்று என மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனத்தை பாராட்டி உள்ளார். இன்ஃபோசிஸ் இணை-நிறுவனர் நாராயணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி சுதா மூர்த்திக்கு மகளிர் தினத்தன்று இனிப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அது சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் (Sudha Murthy Appointed As Rajya Sabha MP) என்ற இனிப்பான செய்தி ஆகும்.   

Sudha Murthy Appointed As Rajya Sabha MP :

சுதா மூர்த்தி ஒரு இந்திய எழுத்தாளர், இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர் ஆவார். நாவல்கள், தொழில்நுட்ப புத்தகங்கள் மற்றும் பணக்கட்டுரைகளை சுதா மூர்த்தி எழுதியுள்ளார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரும் ஆவார். சுதா மூர்த்தி  அறக்கட்டளையின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். பள்ளிகளில் நூலகங்களை சுதா மூர்த்தி ஏற்படுத்தியுள்ளார் மற்றும் பொதுக்கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதியளித்துள்ளார். இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் ஆவார்.  இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் சுதா மூர்த்தி பெற்றுள்ளார்.

TELCO (Tata Engineering And Locomotive Company) நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட First Lady Engineer சுதா மூர்த்தி என்ற பெருமைக்கு உரியவர். கணவர் நாராயணமூர்த்தியை போன்று சுதா மூர்த்தியும் ஒரு பயிற்சி பெற்ற பொறியாளர் ஆவார். சுதா மூர்த்தியின் பங்களிப்பு ஆனது சமூகப் பணி, தொண்டு,  கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகத்தானது. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினைச் செய்துள்ளார். நாராயண மூர்த்தி – சுதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் அக்‌ஷதா மூர்த்தி, மற்றொருவர் ரோஹன் மூர்த்தி. இதில் அக்‌ஷதா மூர்த்தி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. பதவி (Sudha Murthy Appointed As Rajya Sabha MP) வழங்கப்பட்டது தனது பாக்கியமாகவும் மற்றும் நாட்டுக்கு சேவை செய்வதற்கான இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன் என்றும் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply