Summer Fruits: கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்

பொதுவாக கோடை காலத்தில் நம்முடைய உடலின் வெப்ப நிலையானது அதிகமாக இருக்கும். மேலும் இந்த காலத்தில் வியர்வை, வேர்க்குரு, சோர்வு, மயக்கம், தலைவலி, மலச்சிக்கல், ஆக்னீ, முகப்பரு, அம்மை போடுதல் இந்த மாதிரியான பல பிரட்சனைகள் கோடைக்காலத்தில் ஏற்படுகிறது.

நீர்சத்து குறைவினால்தான் இது போன்ற பிரட்சனைகள் நம் உடலில்  ஏற்படுகிறது. நம் உடலில் நீர் சக்தியை சமன்செய்ய அதிக தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி அதிக பழங்களையும் (Summer Fruits) சாப்பிடவேண்டும். இவ்வாறு கோடைக்காலம் நெருங்கி விட்டதால் இந்த சமயத்தில் நம் உடலை பாதுக்காக்க எந்த வகையான பழங்களை சாப்பிடவேண்டும் என்பதன் பட்டியலை இப்பதிவில் காண்போம்.

சிட்ரஸ் பழங்கள் (Citrus - Summer Fruits)

திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லிக்கனி இது போன்ற சிட்ரஸ் பழங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் பி, காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இந்த பழங்களை கோடைகாலத்தில் சாப்பிடலாம். இதை பழமாகவும் அல்லது பழச்சாறாகவும் குடிக்கலாம். இதை சாப்பிடுவதால் வெயிலினால் தோன்றும் உடல் சோர்வுகள் மறைந்து புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

நம் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உடல் பருமன் கெட்ட கொழுப்புகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது. இந்த பழ வகைகளில் உள்ள நார்ச்சத்து பல் தொடர்பான  பிரட்சனைகளையும் சரிசெய்கிறது. உடலில் வாயு தொல்லையை குறைத்து நன்கு பசியை உண்டாகும் ஆற்றல் கொண்டது. சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி உணவில் உள்ள இருப்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு துணை செய்கிறது. இதனால் நம் உடலில் ஹிமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது.

தர்பூசணி (Water Melon - Summer Fruits)

கோடைக்காலத்தில் மட்டுமே நிறைய விற்கப்படும் பழம் தர்பூசணி பழம். இது அதிக நீச்சத்துக்களைக் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாஷியம், மெக்னிஷியம், வைட்டமின்கள்  ஏ, சி ஆகியவை நிறைந்துள்ளது. கோடைக்காலங்களில் அதிகம் உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்து சரியாக கிடைக்கிறது. நீர் பற்றாக்குறையில் இருந்து நம்  உடலை பாதுகாக்கிறது.

முலாம் பழம் அல்லது திரினிப்பழம் (Muskmelon - Summer Fruits)

கோடைக்காலங்களில் அதிகம் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று. மேலும் கோடைக் காலத்திற்கு ஏற்ற நீர் பழங்களில் இதுவும் ஒன்று. இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாஷியம், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த முலாம் பழத்தை வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தை தணிக்கும், கண்பார்வை மேம்பட உதவும், சரும பிரச்சனைகளை சரிசெய்து சருமத்தை பராமரிக்கும்.

அண்ணாச்சி பழம் (Pineapple)

அண்ணாச்சி பழத்தில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், இரும்புச்சத்து இதுபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தில் நாவின் வறட்சியை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மேலும் நோய் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த அண்ணாச்சிப் பழத்திற்கு உண்டு.

மாதுளம் பழம் (Pomegranate)

மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான நீர்சத்து மட்டுமில்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட்,ஆன்டிஆக்சிடண்ட், பொட்டாஷியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதனால் மாதுளம் பழத்தை கோடைக்காலத்தில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் வெப்பமானது குறைக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் கிடைக்கிறது. 

ஆப்பிள் பழம் (Apple)

தினமும் 1  ஆப்பிளை சாப்பிட்டு வர உடலுக்கு நல்லது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடண்ட், நார்ச்சத்துகள் இதுபோன்று இன்னும் ஏராளமான சத்துக்கள் இந்த ஆப்பிளில் நிறைந்துள்ளது. இந்த பழத்தையும் கோடைக் காலங்களில் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியது.

சப்போட்டா பழம் (Sapodilla)

சப்போட்டா பழம் இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. மேலும் இதில் குளுக்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. கோடைக்காலங்களில் இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது. இப்பழம் சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மாம்பழம் (Mango - Summer Fruits)

பழங்களின் அரசன் என்று சொல்லப்படும் மாம்பழம் கோடைக்காலங்களில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் நார்சத்து, கலோரிகள், வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் இருக்கக்கூடிய பெக்டின் இரத்த குழாயில் உள்ள கொழுப்பு திட்டுகள் படிவதை தடுக்கிறது. சருமத்தை பாதுகாத்து பொலிவடையச் செய்கிறது. எனவே இந்த பழத்தையும் கோடைக்காலங்களில் சாப்பிடலாம். ஆனால் அளவோடு சாப்பிடுவது நல்லது. 

கொய்யா பழம் (Guava)

கொய்யா பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருக்கிறது. மேலும் வைட்டமின் ஏ, இ, போலிக் அமிலம், பொட்டாஷியம், மேக்னிஷியம், தாது சத்துக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வெயிலினால் ஏற்படுகின்ற உடல் வறட்சியை தடுத்து உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. இதனால் கோடைக்காலங்களில் கொய்யா பழத்தை சாப்பிடுவது நல்லது.

Latest Slideshows

Leave a Reply