Summer Skin Care Routine : கோடைகால சரும பாதுகாப்பு வழிமுறைகள்

கோடைக்காலத்தில் முகப் பராமரிப்பை விட சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது (Summer Skin Care Routine) அவசியம். குளிர்காலத்தில் வறட்சியை அனுபவிக்கும் சருமம் கோடை காலத்திலும் வறட்சியை சந்திக்கும். ஆனால் இரண்டுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.

குளிர்காலத்தில் பராமரிப்பு செய்த விஷயங்களையே கோடைகாலத்துக்கும் செய்ய கூடாது. குளிர்காலத்தில் முகம் வறண்டாலும் எரிச்சல் இருக்காது. வெடிப்புகள், தோல் உரித்தல் மற்றும் தோலில் வெள்ளை புள்ளிகள் போன்று இருக்கும். ஆனால் கோடை காலத்தில் அப்படி இல்லை. சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் ஏற்படும். இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கான (Summer Skin Care Routine) வழிமுறைகளை பார்க்கலாம்.

கோடைக்கால சருமம் :

பொதுவாக, சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் சருமம் பாதிக்கப்படும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், முகம் மட்டுமின்றி முழு உடலும், வெயில் படும் தோல் பகுதி, வெயில் படாத உடலின் உள் பகுதியும் அதிக வியர்வையால் பாதிக்கப்படும். பருக்கள் என்பதை தாண்டி உஷ்ணக்கட்டிகள், சிறு வியர்வை பருக்கள், முகத்தில் ஏற்படும் முகப்பரு போன்ற பல பிரச்சனைகளும் வரும்.

ஒருபுறம், சூரியனால் ஏற்படும் சேதம், தேவையான ஈரப்பதம் கிடைக்காமல் தோல் அதன் பொலிவை இழக்கும். அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருந்தால், வெயிலில் சென்றாலும், இந்த பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்கின்றனர் தோல் பராமரிப்பு நிபுணர்கள். இந்நிலையில் சருமத்தை குளிர்ச்சியாக்கும் விஷயங்கள் என்னவென்று தற்போது காணலாம்.

Summer Skin Care Routine - கோடைகால சரும பாதுகாப்பு வழிமுறைகள் :

கற்றாழை :

கற்றாழை இயற்கையால் கொடுக்கப்பட்ட அற்புதமான குணங்கள் நிறைந்த ஒரு பொருள். இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அலோ வேரா சமீப வருடங்களில் கோடைகால பானமாக பயன்படுத்தப்படுகிறது. அலோ வேரா எளிதில் கிடைக்க கூடியவை. விலையும் மலிவானது. கற்றாழையை வாங்கி இலையை நறுக்கி தண்ணீரில் பத்து நிமிடம் வைத்தால் அதில் உள்ள மஞ்சள் போன்ற திரவம் வெளியேறும். பின் இலையை இரண்டாக நறுக்கி உள்பகுதியில் உள்ளவற்றை முகம், கழுத்து, கை, கால், அக்குள் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். கற்றாழை அதிக வெயிலைத் தாங்கும் திறன் கொண்டது மற்றும் எரிச்சலை ஏற்படுத்தாது. தினமும் காலையில் இதைச் செய்யலாம்.

வெள்ளரி :

வெள்ளரிக்காய் தாகத்திற்கும், குளிர்ச்சிக்கும் சிறந்தது. வெள்ளரி கோடையில் சாலட் முதல் ஜூஸ் வரை அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு சருமத்திற்கு மட்டுமின்றி கண்களுக்கும் குளிர்ச்சியைத் தருகிறது. வெள்ளரிக்காயை அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து ரோஸ் வாட்டரால் முகத்தை கழுவ வேண்டும். இரண்டு வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களில் வைத்து ஓய்வெடுக்கவும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், முகத்தில் ஏற்படும் உஷ்ணக் கட்டிகள் தடுக்கப்படும். பருக்கள் வராது. வியர்வை பிரச்சனை இருக்காது. குளிப்பதற்கு முன் இதைப் பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வெயிலில் முகம் போனாலும் குளிர்ச்சியாக இருக்கும்.

இளநீர் :

உடல் சூட்டைத் தவிர்க்கும் இளநீர் கோடையில் முகத்தையும் குளிர்ச்சியாக்கும். வெயிலில் வெளியே சென்ற பிறகு, சுத்தமான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். பின்னர் சுத்தமான பருத்தி பஞ்சில் இளநீரை நனைத்து முகத்தில் ஒற்றி ஒற்றி எடுக்கவும். குறைந்தது கால் மணி நேரமாவது இப்படிச் செய்தால் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். தோல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள லாரிக் அமிலம் சருமத்தை தளர்த்தாமல் இருப்பதால், முதுமையும் தாமதமாகும். அதிகமாக இளநீரில் தொடர்ந்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.

நுங்கு :

கேட்கும்போதே சிலிர்க்கும் அளவுக்கு குளிர்ச்சி மிக்கது. அதன் பலன்கள் சொல்லவே தேவையில்லை. வேனல் கட்டிகள் மீது வியர்வை மற்றும் வெயில் பட்டாலோ நெருப்பில் இருப்பது போல் எரிச்சலாக இருக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு வேனில் கட்டிகள் இருக்கும் போது, ​​அவர்கள் உடல் முழுவதும் நுங்கு சாற்றை தடவுகிறார்கள். ஃபேஷியலுக்கு பழங்களைப் பயன்படுத்தும் போது, ​​அவற்றுடன் நுங்கையும் மசித்து தடவி வந்தால், கோடை காலம் முடியும் வரை வியர்வை பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

தயிர் :

தினமும் குளிப்பதற்கு முன், தயிரை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து குளித்தால் வெயிலால் முகம் நிறம் மாறாது. சருமம் பொலிவோடு இருக்கும். தயிர் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். சந்தனப் பொடியை கட்டியான தயிருடன் கலந்து முகத்தில் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது ஆரஞ்சு தோலை பொடி செய்து வைத்து தயிருடன் கலந்து பயன்படுத்தலாம். கோடைக் காலத்திலும் முகம் ஒரு தனி பளபளப்பைப் பெறுகிறது. வாரம் ஒருமுறை பயன்படுத்தினாலும், சருமத்தை பாதுகாப்பாக பாதுகாக்கலாம்.

பூசணிக்காய் கூழ் :

பூசணிக்காய் கூழ் எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும். அதில் சிறிது தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிவற்றை கலந்து முகம், கை, கால் மற்றும் கழுத்தின் பின்பகுதியில் தடவவும். 20 நிமிடம் ஊறவைத்து தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் கோடையில் சருமத்தைப் பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்திருக்கும்.

முட்டை வெள்ளைக்கரு :

ஒரு டேபிள் ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முக வறட்சி நீங்கும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இதுபோன்ற வழிமுறைகளை (Summer Skin Care Routine) பயன்படுத்தி சருமத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.    

Latest Slideshows

Leave a Reply