Sunil Gavaskar Choice : உலகக் கோப்பை தொடரில் முக்கிய ஸ்பின்னர் ஆக ரவி பிஷ்னாய் தேர்வாக வேண்டும்

Sunil Gavaskar Choice :

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், சாஹலை விட ரவி பிஷ்னாய் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar Choice) தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 4 பேரில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

ஏனெனில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். இதன் பின்னர் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும். ஏற்கனவே 14 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திரும்பியுள்ள நிலையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்க முடியாது. இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரவி பிஷ்னாய் சிறப்பாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றார். பவர் பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியபோது, ​​பவர் பிளேயில் துணிச்சலாக கூக்லி பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைத் தாக்கினார்.

ரவி பிஷ்னாய் :

எனினும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குல்தீப் யாதவ் வருகையால் ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்படவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னாயை (Sunil Gavaskar Choice) தேர்வு செய்வேன். ஏனெனில் ரவி பிஷ்னாய் குல்தீப் யாதவ் மற்றும் சாஹலை விட சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பீல்டர். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபியை வீழ்த்த லக்னோ அணியின் முக்கிய வீரர் பிஷ்னாய் தான் என்றார். 23 வயதான ரவி பிஷ்னாய் 21 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply