Sunil Gavaskar : உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை :

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. சொந்த மண்ணில் ஆடுவதால் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தாலும், தற்போது பல அணிகள் பலமாக இருப்பது இந்த தொடரை விறுவிறுக்க வைத்துள்ளது. ஆசிய கண்டத்தில் நடைபெறுவதால் ஆசிய அணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என பலரும் கூறி வரும் நிலையில், Sunil Gavaskar அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இம்முறையும் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லும் என்பதை உறுதி செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் உள்ள திறமையான வீரர்களை பாருங்கள். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பாட்டம் ஆர்டர் அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

Sunil Gavaskar :

அவர்களின் ஆல்ரவுண்டர்களையும் பாருங்கள். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வீரர்கள், தனிப்பட்ட முறையில் ஆட்டத்தை மாற்றக்கூடியவர்கள். அதேபோல, அவர்களிடையே நல்ல பந்துவீச்சுப் படையும் உள்ளது. அவர்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் கூட. இதுவரை உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக Sunil Gavaskar தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதை இர்பான் பதான் உறுதி செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதால், எங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது என இர்பான் பதான் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக வென்று வருவதை சுட்டிக்காட்டிய இர்பான் பதான், முகமது சமி போன்ற சிறந்த வீரர் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றால், இந்திய அணியின் பலத்தை பாருங்கள் என்றார்.

Latest Slideshows

Leave a Reply