Sunita Williams Return Earth March 2025 : சுனிதா வில்லியம்ஸ் 2025 மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் International Space Station (ISS) ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் தான் மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள் (Sunita Williams Return Earth March 2025) என நாசா தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் தாமதமாகி உள்ளதாக அறிவித்துள்ளது.

டிராகன் க்ரூ-9 மிஷன் (Sunita Williams Return Earth March 2025)

நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 விண்கலம் (Dragon Crew-9 Mission) இரண்டு காலி இருக்கைகளுடன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த டிராகன் க்ரூ-9 திட்டத்தின் மூலம் 2025 பிப்ரவரி மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு பத்திரமாக திரும்புவார்கள் (Sunita Williams Return Earth March 2025) என நாசா தெரிவித்தது. மேலும் தற்போது டிராகன் க்ரூ-9 மிஷனின் புறப்பாடு மேலும் 1 மாதம் தாமதம் அடைந்துள்ளதாக நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

8 நாள் பயணம்

கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் 8 நாள் ஆய்வு பயணமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் தங்களது ஆய்வை முடித்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆறு மாதத்திற்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கு நாசா பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில் வரும் 2025 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் (Sunita Williams Return Earth March 2025) தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply