Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு வெறும் 9 நாட்கள் மட்டுமே ஆய்வு நடத்திவிட்டு மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். தற்போது டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் மார்ச் 19-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், (Sunita Williams Returns Earth On March 19th) புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்தது

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மீண்டும் பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்திருந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் (Sunita Williams Returns Earth On March 19th) மார்ச் மாதத்தில் தான் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

என்டூரன்ஸ் விண்கலம்

Sunita Williams Returns Earth On March 19th - Platform Tamil

ட்ரம்ப் உத்தரவின்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் மார்ச் 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் க்ரூ டிராகன் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி (Sunita Williams Returns Earth On March 19th) மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் என்டூரன்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் நிக்கோலி அயர்ஸ், ஆனி மெக்கிளைன், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி மற்றும்  ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றுள்ளனர். இந்த என்டூரன்ஸ் விண்கலம் மார்ச் 15-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் இணையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார் (Sunita Williams Returns Earth On March 19th)

டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் மார்ச் 19-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் நிக் ஹேக் மற்றும் ரஷ்யா வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு (Sunita Williams Returns Earth On March 19th) திரும்ப உள்ளனர். மேலும் வானிலையை பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் பூமிக்கு திரும்பியவுடன் அவர்களால் நடக்க முடியாது. மேலும் அவர்கள் சில மாதங்களுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply