Sunita Williams To Cast Vote From Space : சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு விண்வெளி நிலையத்தில் (Sunita Williams To Cast Vote From Space) இருந்து வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் 7 நாட்களில் பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்டார் லைனர் ஸ்பேஸ் ஷிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வரும் 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு திரும்ப இருக்கிறார்கள்.

நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் :

இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக சுனிதா வில்லியம்ஸ் இருந்தாலும் தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றிருக்கிறார். எனவே அவர் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்நிலையில் வரும்  நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு முன் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

கடந்த 1961-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பி வருகிறது. ஆனால் 2000-ம் ஆண்டிலிருந்து தான் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் பல அதிபர் தேர்தல்கள் நடைபெற்றிருக்கிறது. அப்போது அமெரிக்க குடிமகன்களான விண்வெளி வீரர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றன. இந்த பிரச்சனைக்கு அமெரிக்க ஒரு தீர்வு வைத்துள்ளது.

Sunita Williams To Cast Vote From Space - 'சிறப்பு வாக்குப்பதிவு இயந்திரம்' :

இதன் மூலம் தான் தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார். ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் விண்வெளிக்கு செல்கிறார் எனில் அவர் வாக்களிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் போது அங்கு வாக்குப்பதிவு செய்ய அவருக்கு ‘சிறப்பு வாக்குப்பதிவு இயந்திரம்’ வழங்கப்படும். இந்த சிறப்பு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்து அதை விண்வெளியிலிருந்து பூமிக்கு அனுப்ப வேண்டும்.

1990-ம் ஆண்டு தொடக்கம் :

இந்த நடைமுறையானது கடந்த 1990-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு விண்வெளி வீரர் டேவிட் வுல்ஃப் ‘சிறப்பு வாக்குப்பதிவு இயந்திரம்’ மூலம் விண்வெளியில் இருந்து அதிபர் தேர்தலில் வாக்களித்து இந்த நடைமுறையை தொடங்கி வைத்தார். இவரை தொடர்ந்து 2008-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களான கிரெக் சாமிடோஃப் மற்றும் எட்லூ ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களித்தனர். கடைசியாக 2020-ல் விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் வாக்களித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams To Cast Vote From Space) இணைந்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply