Sunita Williams Trouble Returning To Earth : சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்

Sunita Williams Trouble Returning To Earth :

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்ட நிலையில், 60 நாட்களைத் தாண்டியுள்ளது. இம்மாதம் 18 ஆம் தேதிக்கு முன்னதாக சுனிதா பூமிக்கு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் பூமிக்கு திரும்ப ஒரு வருடம் ஆகும் (Sunita Williams Trouble Returning To Earth) என்று கூறப்படுகிறது. விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு செய்வதற்காக தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்த பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மேற்கொண்டது.

சமீபத்தில், இந்த பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நாசா முடிவு செய்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. போயிங் நிறுவனத்திற்கு விமானம் தயாரிப்பதில் முன் அனுபவம் உள்ளது, அதனால்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் பணியை போயிங் மேற்கொண்டது. இதற்காக, ‘ஸ்டார் லைனர்’ என்ற ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது.

இந்தக் ஷிப் மூலம் ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து சுனிதாவும், வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 7 அன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஜூன் 7 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர், ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஸ்டார் லைனரில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை பயணத்தை மேலும் ஒரு வாரம் தாமதப்படுத்தியது.

இதன்படி ஜூன் 26ம் தேதியே அவர் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனரின் கோளாறு இன்னும் சரியாகாத நிலையில், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது. ஆனால் அதற்கு முன் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப வேண்டும். இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப ஒரு வருடம் ஆகும் என்று செய்திகள் வந்துள்ளன. அதாவது, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு வர ஒரு விண்கலம் தேவை. அவர்கள் ஸ்டார் லைனரில் வர முடியாது. எனவே இந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் எனும் ஷிப்பை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறது. இதில் 4 பேர் வரை பயணிக்க முடியும். எனவே, 2 பேரை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் செல்லும் 2 விண்வெளி வீரர்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள். டிராகன் ஷிப் பூமிக்குத் திரும்பும் போது காலியாக உள்ள இருக்கைகள் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு பூமிக்கு வரவுள்ளதாக தகவல் (Sunita Williams Trouble Returning To Earth) வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply