இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் Super 8 ஒரே பிரிவில் இடம் பெருகிறது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் T20 அதன் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. இந்த Super 8-ன் ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடம் பெருகிறது. இப்போது Super 8 சுற்று ஆனது 20 நாடுகள் பங்கேற்ற குரூப் சுற்று முடிவுக்கு வந்த நிலையில் தொடங்கப்போகிறது. இதில் Super 8 சுற்றில் விளையாடப்போகும் 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவு :

 • இந்தியா
 • ஆஸ்திரேலியா
 • ஆப்கானிஸ்தான்
 • வங்கதேசம்

இந்த Super 8 சுற்றின் முதல் இரண்டாவது பிரிவு :

 • அமெரிக்கா
 • இங்கிலாந்து
 • வெஸ்ட் இண்டீஸ்
 • தென்னாப்பிரிக்கா

ICC-யின் இந்த முடிவு ஆனது பரவலான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. பல விமர்சகர்களும் ஏன் இப்படி? இது முட்டாள்தனம் என்று விமர்சித்து வருகிறார்கள். A மற்றும் B பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரே குரூப்பில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் இது இப்போது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. எப்பொழுதும் இப்படி குரூப் பிரிக்கப்படும்போது A மற்றும் C பிரிவில் முதலிடம் பிடிக்கும் இரு அணிகள், B மற்றும் D பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் இரு அணிகள் என அந்த 4 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெறும் வகையில் பிரிக்கப்படும் .

A2, B1, C2, D1 ஆகிய இடங்களில் முடிக்கும் அணிகள் ஆனது மற்றொரு பிரிவில் இடம்பெறும். அந்த வகையில் பிரிக்கப்பட்டிருந்தால் Super 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் ஆனது இடம்பெற்றிருக்க வேண்டும். B பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஆனது இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது அப்படியே மாறி இருப்பதால் இப்போது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. டென்னிஸ் தொடர்களில் கொடுக்கப்படுவது போல் ஒரு ரேங்கிங் ஆனது இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகளுக்கும் Seeding கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Seeding ஆனது ஒவ்வொரு குரூப்பிலும் இருக்கும் அணிகளுக்கும் ரேங்கிங் மற்றும் முந்தைய பெர்ஃபாமன்ஸ் ஆகியற்றை வைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

 • இந்தியா (A1)
 • பாகிஸ்தான் (A2)
 • இங்கிலாந்து (B1)
 • ஆஸ்திரேலியா (B2)
 • நியூசிலாந்து (C1)
 • வெஸ்ட் இண்டீஸ் (C2)
 • தென்னாப்பிரிக்கா (D1)
 • இலங்கை (D2)

இதன் அடிப்படையில் Group 1-ல் – A1, B2, C1, D2 ஆகிய அணிகள் இடம்பெறும். Group 2ல் – A2, B1, C2, D1 ஆகிய அணிகள் இடம்பெறும். ICC-யின் இந்த முடிவு பரவலான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. பல விமர்சகர்களும் ஏன் இப்படி? இது முட்டாள்தனம் என்று விமர்சித்து  வருகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply