சென்னையில் வர இருக்கும் Super Express Way And Super Bridges

Super Express Way :

சென்னை பெங்களூர் Super Express Way சாலை திட்டம் ஆனது ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகின்றன. இந்த Super Express Way ஆனது மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு மிக நீண்ட வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் வழியாக இந்த Super Express Way ஆனது 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பசுமை வழிச்சாலைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.

சென்னையை பெங்களூவுடன்  இணைக்கும் Super Express Way சாலை பணிகள் ஆனது சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த Super Express Way சாலையின் சிறப்பம்சம் ஆனது இந்த Super Express Way சாலை ஆனது நடுவில் எந்த இடத்திலும் மற்றும் எந்த ஊருக்குள்ளும் செல்லாது. இந்த நிலையில் Super Express Way சாலையில் இருந்து ஆங்காங்கே வெளியேறுவதற்கான Interpass மற்றும் Interchange சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதாவது Super Express Way சாலையில் உள்ள போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஊருக்குள் செல்ல விரும்பும் நபர்கள் Super Express Way-யில் இருந்து வெளியேற வசதியாக Interchange சாலைகள் ஆனது போடப்பட்டு வருகின்றன.

இதற்கான கட்டுமானப் பணிகள் ஆனது சிறப்பாக மற்றும் விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்த 2025 வருட இறுதியில் இந்த Super Express Way சாலை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. இந்த Super Express Way சாலை பயன்பாட்டிற்கு வந்த பின் பெங்களூர்-சென்னை இடையிலான பயணம் ஆனது அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெங்களூர் சென்னை இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகின்றது. இந்த Super Express Way சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் போக்குவரத்து ஆனது 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் பெங்களூர் சென்னை இடையே இன்னும் வேகமாக, மற்றும் எளிதாக பயணம் செய்ய முடியும். சென்னை பெங்களூர் இடையே இந்த Super Express Way சாலை அமைக்கும் பணிகள் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையே Super Bridge :

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த 2024 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலப் பணி திட்டம் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணி ஆனது ₹3,500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே 23.2 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலப் பணி  ஆனது இந்த 2024 நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 23.2 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் ஆனது ஒரே நீளமான பாலமாக அமைக்கப்படும். இடை இடையே மக்கள் வெளியேற, மற்றும் உள்ளே வர இணைப்பு பாலங்கள் ஆனது அமைக்கப்படும்.

இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலம் ஆனது 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்டமான பாலம் ஆகும். இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலத்திற்கான முழு ரிப்போர்ட் ஆனது விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னை-பெங்களூர் செல்ல பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் ஆனது கட்டப்படும்.  மெட்ரோ பாணியில் நடுவில் ஒரு பில்லர் வைத்து இந்த பாலம் ஆனது அமைக்கப்படும். இரண்டு கட்டங்களாக இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலம் ஆனது அமைக்கப்படும். மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை ஒரு கட்டமாகவும் மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை ஒரு கட்டமாகவும் அமைக்கப்பட உள்ளது. அதாவது ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் இந்த புதிய பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 10-15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம். தினமும் இந்த நெடுஞ்சாலையில் சுமார் 1.15 லட்சம் கார்கள் பயணம் செய்கின்றன. Peak Hours-ஸில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இங்கே பயணம் செய்கின்றன. இந்த பாலம் கட்டுமானம் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சுமார் 80% வாகனங்கள் இந்த பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த சாலையின் சூப்பர் வீடியோ ரீல்ஸாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply