Supreme Court Of India Notification : உச்ச நீதிமன்றத்தில் 107 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மிக உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கோர்ட் மாஸ்டர், உதவியாளர் பணியிடங்களை (Supreme Court Of India Notification) நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.       

Supreme Court Of India Notification

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கோர்ட் மாஸ்டர் (Court Master) பணியிடங்களுக்கு 31 காலிப்பணியிடங்களும், உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு 76 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 107 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

உச்ச நீதிமன்றத்தில் இந்த கோர்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு (Supreme Court Of India Notification) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், உதவியாளர் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவியாளர் பணியிடங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

உச்ச நீதிமன்றத்தில் இந்த கோர்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு (Supreme Court Of India Notification) 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், உதவியாளர் பணியிடங்களுக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

உச்ச நீதிமன்றத்தில் இந்த கோர்ட் மாஸ்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.67000 சம்பளமும், உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.47000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் எழுத்து தேர்வு, டைப்பிங் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

6. தேர்வு நடைபெறும் இடம் (Exam Center)

உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் தேர்வு மையமானது (Supreme Court Of India Notification) சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூர், போபால், கொல்கத்தா, கான்பூர், மும்பை, மைசூர், பாட்னா, புனே, விசாகப்பட்டினம், எர்ணாகுளம், கௌகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

உச்ச நீதிமன்றத்தில் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (Supreme Court Of India Notification) தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2024 ஆகும்.

9. மேலும் விவரங்களுக்கு

தேர்வு தொடர்பான அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.sci.gov.in/recruitments/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply