Suraikai Benefits In Tamil : சுரைக்காய் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களில் விளையும் சுரைக்காய் சத்தானது மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் சுரைக்காயை தினமும் சாப்பிடுவதால் (Suraikai Benefits In Tamil) ஏற்படும் நன்மைகளை காணலாம்.

சுரைக்காய் நன்மைகள் (Suraikai Benefits In Tamil)

உடல் சூடு தணிக்க

இந்தியா மாதிரியான வெப்பமண்டல பகுதிகளில் இருக்கக் கூடியவர்களுக்கு இயற்கையாகவே உடல் சூடு அதிகமாகவே இருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டை குறைக்க (Suraikai Benefits In Tamil) சுரைக்காயை உணவில் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணிந்து  நோய்களில் இருந்து காக்கும். உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியையும் பொலிவையும் தரும் சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம்.

உடல் புத்துணர்ச்சி பெற

சமைத்த சுரைக்காய் ஒரு நல்ல டையூரிடிக் ஆகும். இந்த காய் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியே வராமல் மீண்டும் இரத்தத்தில் கலந்து உடலுக்குப் பலவிதமான தொந்தரவுகளை உண்டாக்கும். இந்த நிலையில் சிறுநீர் நன்றாக வெளியேற சுரைக்காய் (Suraikai Benefits In Tamil) உதவுகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்சனை ஏற்படாமல், உடல் புத்துணர்ச்சி பெரும்.

தூக்கம் வரவைக்க

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், நல்லெண்ணையுடன் சுரைக்காய்ச் சாற்றைக் கலந்து, இரவில் படுக்கும் முன் கூந்தலில் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை முடியின் தண்டு, உச்சந்தலை போன்றவற்றில் தடவினால் உடனடியாக தூக்கம் வரும். சுரைக்காயின் இலையை வேகவைத்து சாப்பிட்டால் தூக்கமின்மையும் குணமாகும்.

பித்தத்தைக் குறைக்க

மன அழுத்தம் மற்றும் உணவுமுறை மாற்றத்தால் பித்த அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் பலவீனம் இழந்து காணப்படும். இந்த பித்தத்தை குறைக்க சுரைக்காய் (Suraikai Benefits In Tamil) சிறந்தது. மதிய உணவோடு சுரைக்காய் சாப்பிட்டால் பித்தம் சமன் செய்யும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்து உடலை வலுவாக்கும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. குடல் புண்களை ஆற்றும். மூலநோய்க்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.

Latest Slideshows

Leave a Reply