Suriya 44 First Look : சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சூர்யா 44 படத்தின் நட்சத்திர நடிகர்கள் அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Suriya 44 First Look) தற்போது வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்படம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பூஜா ஹெக்டே, நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை (Suriya 44 First Look) கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ளார்.

Suriya 44 First Look :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலாக வந்திருப்பார். அவரது குளோசப் காட்சிகள் ரசிகர்களை மிரட்டின. அதேபோல் கங்குவா படத்தின் டீசரில் சூர்யா தனது முகத்தை குளோசப் காட்சியில் காட்டி மிரட்டுவார். அதேபோல் தற்போது வெளியாகியுள்ள சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்ட் (Suriya 44 First Look) வீடியோவில் திரும்பியபடி அமர்ந்திருக்கும் சூர்யா தனது முகத்தை மிக நெருக்கமாக ஜூம் செய்து காட்டியுள்ளார். இதில் ரோலக்ஸ் பிரெஞ்ச் தாடியுடன் இருப்பது போல் இருக்கிறதே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் 80களின் ரெட்ரோ நாயகர்களின் ஆடை மற்றும் ஃபங்க் ஹேர்ஸ்டைளுடன் சூர்யாவின் லுக் மாஸாக அமைந்துள்ள நிலையில், அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. சூர்யா இந்த வீடியோவில் கேங்ஸ்டர் போன்ற தோற்றத்தில் தோன்றியுள்ள நிலையில், அந்த வீடியோவுடன் ‘காதல், சிரிப்பு, போர்’ என்ற வசனம் இடம்பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குநரும் நடிகருமான உறியடி விஜயகுமார் நடிக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும், ஷபிக் முகமது அலி படத்தொகுப்பும் செய்யவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

Latest Slideshows

Leave a Reply