Suriya 44 Shooting Completed : சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

  • தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் (Suriya 44 Shooting Completed), சூர்யா படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா 44 :

  • சூர்யா நடிப்பில் உருவான படங்களிலேயே ‘சூர்யா 44’ திரைப்படம் வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் நாசர், தமிழ், கருணாகரன், பிரேம்குமார், ரம்யா சுரேஷ், சந்தீப்ராஜ், ராமச்சந்திர துரைராஜ், முருகவேல் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
  • அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். படத்தொகுப்பை ஷபீக் முகமது அலி செய்துள்ளார்.

Suriya 44 Shooting Completed :

  • வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது (Suriya 44 Shooting Completed) நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை சூர்யாவே தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
  • மேலும் அவர் குறிப்பிட்டதாவது, ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான படப்பிடிப்பானது பல இடங்களில் முடிந்துள்ளது. திறமையான அற்புதமான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள். வாழ்நாள் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் என்ற சகோதரன் உருவாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

தீவிரமாக நடக்கும் இறுதிக்கட்ட பணிகள் :

  • சூர்யா 44 திரைப்படம் எப்போது வெளியாகும் என எந்த தகவலும் வெளியாகவில்லை, படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை சீக்கிரமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கங்குவா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சூர்யா 44 படத்தின் ட்ரெய்லர், டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சூர்யா 44 படம் பொங்கலுக்கு வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்தது (Suriya 44 Shooting Completed) ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply