Suriya 44th Movie Glimpse Video : சூர்யா 44 திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 44 திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை (Suriya 44th Movie Glimpse Video) வெளியீட்டு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நிகழ்ந்து வரும் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நல்ல கதைகள் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிடத் தயாராக உள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரலாற்றுக் கதை களத்தில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கங்குவா’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூர்யா 44 :

இதையடுத்து நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. முதன்முறையாக ‘சூர்யா 44‘ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்காக இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

Suriya 44th Movie Glimpse Video :

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியீட்டு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிளிம்ப்ஸ் வீடியோவில் (Suriya 44th Movie Glimpse Video) சூர்யா ரெட்ரோ லுக்கில் உள்ளார். இதன் மூலம் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை உறுதி செய்கிறது. இந்த வீடியோவிற்கு ‘தி ஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிளிம்ப்ஸ் வீடியோவில் அனைவரும் சூர்யாவுக்காக காத்திருக்க படு மாஸாக சிகரெட் புகைத்தபடி மிகவும் ஸ்டைலான கேங்ஸ்டர் தோற்றத்தில் சூர்யா நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும் இது காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply