Suriyakumar Yadhav ODI Form: சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிக்கு சரிப்பட்டு வர மாட்டார்...

இந்திய அணி நேற்று முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடியது. இருந்தும் பேட்ஸ்மேன்கள் எவரும் சிறப்பாக செயல்படவில்லை. இஷன் கிஷான் மட்டுமே அரை சதம் அடித்தார். மற்ற யாரும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. சூரியகுமார் யாதவ் இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் ரன்கள் அடிக்கவில்லை. இதனைக் கண்டு ஆகாஷ் சோப்ரா அவர்கள் கடும் கோபம் கொண்டுள்ளார். T20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்குள் ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடுவது சரியல்ல. இவ்வளவு சீக்கிரமாக ஒரு நாள் போட்டிகளில் சூரியகுமார் தயாராகவில்லை என்று கூறியுள்ளார்.

Suriyakumar Yadhav ODI Form :

இந்திய அணியின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ராக்ஸ்டார் ஆக மாறியுள்ளார். இவர் ஏ.பி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். அவரைப் போலவே சூரியகுமார் யாதவும் அனைத்து பக்கங்களும் பந்தை விரட்டி வருவார். இவருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் திடீரென பவுலர்களின் திட்டங்களை மாற்றி பவுண்டரி விளாசுவதில் வல்லவர்.

T20 கிரிக்கெட்டை பொருத்தவரை கெத்தாக உள்ள சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட்டு, ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஜீரோ ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பிறகு நடந்த ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் வந்தார். தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்பாக விளையாடி வரும் போட்டிகளில் சரியாக செயல்பட முடியவில்லை. குறிப்பாக நேற்று நடந்த வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடவில்லை. மிகவும் எளிதான அணியாக பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே சிறப்பாக செயல்பட முடியாதது அவருக்கு பெரும் பின்னடைவாகும். நேற்று நடந்த போட்டியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார். வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா :

இது குறித்து பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன. அவர் ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை கொஞ்சம் கூட சரிப்பட்டு வர மாட்டார் என விமர்சித்துள்ளனர். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் அவர் இதுவரை 24 ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளார். அவர்களும் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவர் டி20 போலவே நினைத்துக் கொண்டு ஒரு நாள் போட்டியையும் விளையாடுகிறார். குறைந்த போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளதால் அவருக்கு அவ்வளவாக அனுபவம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஆகாஷ் சோப்ரா சூரியகுமாரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply