Suriya's Kanguva Teaser Releasing : சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் (Suriya’s Kanguva Teaser Releasing) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் மிரட்டலான வில்லனாக சில நிமிடங்கள் இருந்தாலும், அவரது ரோலக்ஸ் கதாபாத்திரம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. ‘சூரரைப்போற்று’ படத்துக்காக தேசிய விருது பெற்றார். தொடர்ந்து சவாலான வேடங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கங்குவா படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. வரலாற்றுப் படமான கங்குவா, சர்வதேச அளவில் 10 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா டீசர் (Suriya's Kanguva Teaser Releasing)

மேலும், சர்வதேச அளவில் வெளியாக உள்ள இந்த படம் முக்கியமான மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை பரிசீலித்த பிறகே ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படும் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் படத்தின் வெளியீடு என்று கூறப்படுகிறது. கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் அன்று 19/03/2023 மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் ஹீரோ சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘கங்குவா’ படத்தின் டீசர் (Suriya’s Kanguva Teaser Releasing) வெளியானது. கங்குவா டீசரில் ரசிகர்களை கவரும் ஒரு காட்சி இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்னதாக வெளியான க்ளிம்ப்ஸ் எல்லாமே கங்குவா படத்தின் மீது ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தி சிவாவின் சொதப்பலான மேக்கிங் டீசரில் தெரிகிறது. இந்தப் படம் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகுமா என்பது படத்தின் திரைக்கதையைப் பார்த்தால் தான் தெரியும்.

Latest Slideshows

Leave a Reply