Surya 43 : சூரரைப் போற்று கூட்டணியில் சூர்யா 43 | டைட்டிலில் ட்விஸ்ட் வைத்த படக்குழு

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. Surya 43 படத்தின் டைட்டில் ட்விஸ்டுடன், படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில், 10 மொழிகளில் தயாராகும் இந்தப் படம், வரலாற்று ஜானரில் பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கங்குவா படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனுடன் சூர்யா இணையவுள்ளார். அதன்படி வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. அதனால் வாடிவாசலுக்கு முன் வேறு படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருந்தார். அதன்படி சூர்யாவின் 43-வது (Surya 43) படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக கூறப்படுகிறது.

Surya 43 - படத்தின் டைட்டில் :

தற்போது அது உறுதி செய்யப்பட்டு தலைப்புடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Surya 43 என்ற பெயரில் வெளியான அப்டேட்டில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘Surya 43’ படத்தின் தலைப்பு ‘புறநானூறு’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டைட்டிலின் ஒரு பகுதியை மட்டும் படக்குழு வெளியிட்டு முந்தைய வரியை மறைத்துள்ளது.

சூரரைப் போற்று கூட்டணி :

இப்படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை இயக்குநர் சுதா கொங்கராவும் வென்றனர். இதையடுத்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புதிய படத்தின் அறிவிப்பை தனது X வலைதள பக்கத்தில் மோஷன் போஸ்டருடன் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, “நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் குமார், அண்ணன் துல்கர் சல்மான், திறமையான நஸ்ரியா , சிறந்த நடிகர் விஜய் வர்மா, 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பயர் எமோஜியுடன் கமெண்ட் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 43வது படம் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் 100வது படமாகும். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்துக்காக பெற்றார். இந்த படத்தின் மூலம் விஜய் வர்மா தமிழில் அறிமுகமாக உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply