Surya 45 Movie : சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கப்போவதாக தகவல்

பிரபல நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் (Surya 45 Movie) வெளியாகியுள்ளது.

சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி :

நடிகர் சூர்யாவின் 45வது படத்தை (Surya 45 Movie) யாருமே எதிர்பாராத வகையில் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக ஆகியுள்ளது. காமெடி படங்களை மட்டுமே இதுவரை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, தற்போது சூர்யாவை வைத்து எதுபோன்ற கதையை இயக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜியின் படங்களை தயாரித்த வேல்ஸ் தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால், இந்த படத்தில் இருந்து சூர்யா சில காரணங்களால் விலகினார். அதேமாதிரி பாலா இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த வணங்கான் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து முடித்துள்ளார். சூர்யா ஏற்கனவே, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் அந்த படத்தின் பணிகள் நீண்ட நாட்களாகவே தொடங்காமலே உள்ளது. இந்த நிலையில் சூர்யா – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி உருவாகியுள்ளது.

Surya 45 Movie - ஆர்.ஜே.பாலாஜி :

எதிர்நீச்சல் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு நானும் ரவுடிதான் திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த இவர் முதல் முறையாக எல்.கே.ஜி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். அடுத்ததாக வீட்ல விசேஷம் என்ற படத்தை சரவணனுடன் இணைந்து இயக்கினார். தற்போது சூர்யாவை வைத்து படம் (Surya 45 Movie) இயக்க உள்ளார். இந்த படம் ஆக்ஷன் படமாக இருக்குமா அல்லது காமெடி படமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply