Surya Played ISPL Match With Sachin : சச்சின் பவுலிங்கை அடித்து பறக்கவிட்ட சூர்யா

Surya Played ISPL Match With Sachin :

ஐஎஸ்பிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சச்சின், ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன் நடிகர் சூர்யா கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் டி10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கியுள்ளார். இந்த தொடரின் முதல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னையைத் தவிர மும்பை, ஹைதராபாத், ஸ்ரீநகர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஆறு அணிகளையும் திரையுலக பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.

அதன்படி, சென்னை அணியை சூர்யாவும், ஹைதராபாத் அணியை ராம் சரணும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், ஸ்ரீநகர் அணியை அபிஷேக் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும் வாங்கி உள்ளனர். இந்த தொடரை பிரபலப்படுத்தும் வகையில் நேற்று திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது. கிரிக்கெட் பிரபலங்களின் அணியில் சூர்யா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதேபோல், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாப் படேல் மற்றும் பலர் கிரிக்கெட் வீரர்கள் அணியில் இருந்தனர். முதலில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் அணி பத்து ஓவர்களில் 94 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

அக்ஷய் குமார் தலைமையிலான கில்லாடி லெவன் அணியில் நடிகர் சூர்யா (Surya Played ISPL Match With Sachin) களமிறங்கும் போது சச்சின் டெண்டுல்கர் பந்து வீசினார். அப்போது சச்சின், ரெய்னா போன்ற பழம்பெரும் ஜாம்பவான்களின் பந்துவீச்சைப் பதம் பார்த்த சூர்யா, கடைசியாக முனாப் பட்டேலின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். சூர்யா கிரிக்கெட் விளையாடிய (Surya Played ISPL Match With Sachin) வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியாவும் போட்டியைக் காண வந்திருந்தனர். சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply