Suya Munnetram Book Review : சுய முன்னேற்றம்

வணிக உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் உள்ளனர். எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலை பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் எதை சேர்ந்தவர் என்பதை எது தீர்மானிக்கிறது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள், ஆனால் நமது மனநிலைக்கும் அணுகுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், பலமுறை தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஒருவர் கடுமையாகப் போராடி அமெரிக்க அதிபராக வாகை சூடினார். தான் வளர்த்து வந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் பின்னாளில் பிரபல கம்ப்யூட்டர் ஜாம்பவான் ஆனார். அவர்கள் யார் தெரியுமா? இப்படி தன்னைத்தானே முருகேற்றிக்கொள்ளவும் தொழிலதிபராக சிறந்து விளங்கவும் தேவையான அணுகுமுறைகளை ஸ்பெயினில் உள்ள நவரா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் ஆலோசகருமான பாப்லோ மெல்லா பட்டியலிட்டுள்ளார்.

Suya Munnetram Book Review - நிதர்சனங்களைப் புரிந்து கொள்தல் :

  • உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் யதார்த்தமான பார்வையையும் புரிதலையும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே சுய முன்னேற்றம் சாத்தியமாகும்.
  • குறிப்பாக நம்முடன் பணிபுரிபவர்களிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. எல்லாமே நடக்கும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து, சூழ்நிலையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம்.

பலமும் பலவீனமும் :

  • தப்பித்தவறிகூடத் தவறுகள் நடக்காமல் இருக்க நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் ஒரு சிக்கல்தான். நமது குறைகளை ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பலவீனங்களை ஒப்புக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமாகும். இல்லையெனில் இதயம் தோல்வியால் உடைந்து விடும். தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வார்கள். எனவே, வெற்றியைக் கொண்டாடுவோம்; தோல்வியை நிதானமாக ஏற்றுக் கொள்வோம்.

மகிழ்ச்சியும் நன்றியும் :

  • நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்பு வரும்போது, ​​உடனடியாக மகிழ்ச்சி அடைகிறோம். சிறிது நேரம் முழுமையாக ஈடுபடுவோம். ஆனால் காலப்போக்கில் உத்வேகம் மறைந்து அதன் அருமை மறந்துவிடுகிறது. இந்த வேலை கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த காலம் போய், அது சரியில்லை, குறை என சலிப்பூட்டும். எனவே நமது மனச்சோர்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.

நேர்மறை சிந்தனை :

  • எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட நேர்மறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க 90 சதவீதம் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு நண்பர்கள் சந்திப்புக்குச் செல்லும் போது எப்படியும் அந்த கூட்டம் அறுவையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு சென்றால் நிச்சயம் கொண்டாட்ட மனநிலைக்கு எளிதில் வர முடியாது.

எட்டக்கூடிய இலக்கு :

  • நாம் அடையக்கூடிய இலக்கை நிர்ணயிக்கும் போது, ​​உத்வேகம் தானாகவே எழுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டு திட்டமிடுங்கள்; வெல்லுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கும் முக்கியமான முடிவுகளை நீங்களே முன்வந்து எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் போது தானாகவே ஊக்கத்தை அதிகரிக்கிறது.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி :

  • தடைகள் வரும்போது மனம் தளருவது சகஜம். ஆனால், விழும்போது நம்மைத் தூக்கி நிறுத்தும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பலமுறை தோல்வியடைந்த ஆபிரகாம் லிங்கன், விடாமுயற்சி இல்லாமல் அமெரிக்காவின் அதிபராக எழுந்து நின்றிருக்க முடியாது. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் வளர்த்து வந்த நிறுவனத்தை கைவிட்டிருந்தால் உலகப் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் ஜாம்பாக ஆகியிருக்க மாட்டார்.

Latest Slideshows

Leave a Reply