Sweet Karam Coffee Web Series Review | ஸ்வீட் காரம் காபி' வெப் சீரிஸ் திரை விமர்சனம்
மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாகப் தொகுத்து காட்டுகிற வெப் சீரிஸ் தான் ஸ்வீட் காரம் காபி. இது வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையின் மீதான அன்பைக் கண்டுபிடிப்பதையும், தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான அம்சங்களையும் மையமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது. கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் ஸ்வாதி ரகுராமன் மற்றும் பிஜாய் நம்பியார் ஆகியோர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். சாந்தி, மது, லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸின் திரை விமர்சனத்தைப் தற்போது காணலாம்.
Sweet Karam Coffee கதைக்களம்
முதலில் வெப் தொடரின் கதைக்களம் குறித்து தற்போது காணலாம். அந்த வகையில் ஒரு வீட்டில் வசித்து வரும் மாமியார் லட்சுமி, மருமகள் மது மற்றும் பேத்தி சாந்தி ஆகியோர் குடும்பத்தில் சந்திக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளால் மனம் சோர்வடைந்து அதிலிருந்து மீண்டு வர மூவரும் ஒன்றாக சேர்ந்து சாலைப் பயணம் செல்ல முடிவு செய்கிறார்கள். இதற்குப் பிறகு என்ன ஆனது, அவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைத்ததா இல்லையா என்பது தான் இந்தப் படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.
Sweet Karam Coffee திரை விமர்சனம்
ஸ்லைஸ்-ஆஃப்-லைஃப் நாடகங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கை மற்றும் உள்ள உணர்ச்சிகளைக் கையாள்வதால், அடையாளம் காண்பது மிகவும் எளிதாக இருக்கும். ஸ்வீட் காரம் காபி போன்ற தொடர்களில் ஒன்று, ஒரே மாதிரியான ஆண்களின் உலகத்தைப் பற்றி பேசுகிறது மற்றும் பெண்கள் தங்கள் இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களை தியாகம் செய்வதன் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் எப்படி போராடுகிறார்கள். பயணம் எப்படி நம் ஆன்மாவை விடுவிக்கும் என்பதை பல திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த 8 பாகங்கள் கொண்ட தொடரின் சிறப்பு என்னவென்றால், மையக் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் மோதல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய நாடகத்தை இழுத்தடித்துள்ளனர். உண்மையில் பார்ப்பதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். வழியில் உணர்வுகளைக் காட்டுகிறோம் என்ற பெயரில் கதாபாத்திரங்களைக் காட்டி எபிசோட்களை கடத்தியுள்ளனர். போதைக்குறைக்கு லட்சுமியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை காட்ட , அவர் ஒரு முன்னாள் காதலனைத் தேடுவது போல் காட்சி படுத்தி, இறுதியில் தோழியை தேடுவது போல சஸ்பென்ஸில் முடித்துள்ளனர். த்ரில்லர், காமெடி, க்ரைம் என மூன்றுமே இதில் இடம்பெறவில்லை. இந்த திரைக்கதையில் பெரிய ஓட்டை உள்ளது. அதாவது நடிப்பால் நடிகர்கள் எவ்வளவுதான் எடுக்காட்டினாலும், கவிதைகளில் கோட்டை விடுகின்றனர். இந்த தொடர் சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை என்றாலும் படத்தை பார்க்கலாம்.