Swiss Invention Of Machine For Painless Death : வலியற்ற மரணத்திற்கான இயந்திரத்தை சுவிட்சர்லாந்து கண்டுபிடித்துள்ளது

சர்கோ காப்ஸ்யூல் :

‘சர்கோ காப்ஸ்யூல்’ என்பது ஒரு தனிநபரை குறைந்த வலியுடன் விரைவாக இறக்க அனுமதிக்கும் ஒரு இயந்திரம் (Swiss Invention Of Machine For Painless Death) ஆகும். இந்த இயந்திரத்தின் உள்ளே ஒருவர் படுத்துக்கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளிருக்கும் ஆக்சிஜன் வாயுவுக்குப் பதிலாக நைட்ரஜன் வாயு நிரம்பி நம் உடலில் ‘ஹைபோக்சியா’ (Hypoxia) பாதிப்பு ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும் என இதனை வடிவமைத்த ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.

Swiss Invention Of Machine For Painless Death :

இறக்க விரும்பும் நபர் முதலில் அதற்கான மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டம் கூறுகிறது. இந்த தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்த அதனுள்ளே படுத்து கதவை மூட வேண்டும். பிறகு அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்ற பட்டனை அழுத்தினால் அடுத்து என்ன ஆகப் போகிறது தெரியுமா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு ‘நீங்கள் இறக்க விரும்பினால் இந்த பட்டனை அழுத்தவும்’ என்ற கட்டளை வந்தவுடன் உள்ளிருக்கும் நபர் அந்த பட்டனை அழுத்த வேண்டும். பிறகு இருமுறை காற்றை சுவாசித்தவுடன் அவர்கள் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்க நிலைக்குச் சென்று சிறிது நேரம் மகிழ்ச்சியாக உணர்வார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து 5 நிமிடங்களுக்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள்.

இந்திய மதிப்பில் ரூ.1,600 கட்டணம் :

ஒருமுறை பட்டனை அழுத்தியவுடன் 30 நொடிகளுக்குள் 21% ஆக்சிஜன் அளவில் இருந்து 0.05%-க்கு ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். சர்கோ காப்ஸ்யூலில் உள்ள கணினியில் உள்ளிருக்கும் நபரின் ஆக்சிஜன் அளவு இதயத்துடிப்பு அளவு, இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும். இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு சுவிட்சர்லாந்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,600) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சட்டப்பூர்வ அனுமதி :

இந்த ‘சர்கோ காப்ஸ்யூல்’ இயந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் இதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாகவும் கடுமையான உடல் பாதிப்படைந்தவர்களை சட்டப்படி கருணைக் கொலை செய்ய சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கி வருவதாகவும் அதை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக இந்த இயந்திரத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாகவும் இந்த சோதனையில் மனிதர்களோ, விலங்குகளோ பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடி செலவு :

இந்த ‘சர்கோ காப்ஸ்யூல்’ இயந்திரத்தை உருவாக்க 650000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.6 கோடி) செலவானதாகவும் நெதர்லாந்தில் 12 வருடமாக இதனை ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும் ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ (Swiss Invention Of Machine For Painless Death) தெரிவித்துள்ளது. மேலும் மரண தண்டனைகளுக்கு இந்த ‘சர்கோ காப்ஸ்யூல்’ இயந்திரம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply