Switzerland Removes India In Preferred Countries : இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கி உள்ளது

இந்தியாவை விருப்ப நாடுகளின் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து அரசு (Switzerland Removes India In Preferred Countries) அதிரடியாக நீக்கியிருக்கிறது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்து வெளிநாடு உறவுகளின் விஷயத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலமாக கனடா நாட்டுக்கும், இந்தியாவுக்கும் உலகப்போர் நடக்கும் அளவுக்கு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் நமது நட்பு நாடான அமெரிக்காவுக்கும் இந்திய உளவு ஏஜென்ட்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

இந்தியாவில் மேகி நூடுல்ஸ்க்கு தடை

சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனமான நெஸ்லே நிறுவனம் இந்தியா முழுவதும் தனது உற்பத்தி பொருட்களை விற்று வருகிறது. இதில் முதல் இடத்தில் மேகி நூடுல்ஸ் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான இந்த மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு ரசாயனம் கலந்து உள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மத்திய அரசு 2015-ம் ஆண்டு மேகியை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தடை செய்தது.         

மத்திய அரசின் இந்த தடை உத்தரவால் அந்நேரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 38000 டன் அளவுள்ள மேகியை நெஸ்லே நிறுவனம் அழித்தது. மேலும் இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நெஸ்லே நிறுவனம் நாடியது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையின் போது மேகி நூடுல்ஸில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு எதிராக வாதிட்டது. ஆனால் இந்த வாதத்தினை மறுத்து மத்திய அரசு மேகியில் ஈயம் கலக்கப்பட்டு உள்ளதாக நெஸ்லே நிறுவனம் மீது குற்றம் சுமத்தியது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இப்படி நெஸ்லே நிறுவனமும், மத்திய அரசும் மாறிமாறி குற்றம் சுமத்தி வந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த தீர்ப்பால் நெஸ்லே நிறுவனத்துக்கு ரூ.320 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு கடுமையாக பாதித்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக தனது நாட்டின் அரசின் மூலம் இந்தியாவை (Switzerland Removes India In Preferred Countries) விருப்ப நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

விருப்ப பட்டியலில் இந்தியாவின் பெயர் நீக்கம் (Switzerland Removes India In Preferred Countries)

சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் இந்திய வர்த்தக நிறுவனங்களும் சுவிட்சர்லாந்தில் வணிகம் செய்து வருகின்றன. இதனால் இந்திய வர்த்தக நிறுவனங்களை அந்நாடு விருப்ப பட்டியலில் வைத்திருந்தது. மேலும் அந்நாட்டில் விருப்ப பட்டியலில் இல்லாத வணிக நிறுவனங்கள் லாபத்தில் 10% வரியை செலுத்த வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாகும். மேலும் இந்தியா விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்ததால் 5% மட்டுமே வரி செலுத்தி வந்தது. இந்நிலையில் விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை (Switzerland Removes India In Preferred Countries) சுவிட்சர்லாந்து அரசு நீக்கியுள்ளதால் இனி இந்திய வணிக நிறுவனமும் 10% வரியை செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த உத்தரவு வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply