Symptom Of The Arcturus Corona Variant: கண் பிரச்சனைகளை சாதாரணமா எடுத்துக்காதீங்க
COVID-19 மனித இனத்தைப் பாதிக்கும் புதிய அறிகுறிகள் ஒவ்வொரு நாளும் மாறுபாடுகளைக் காட்டும் வண்ணம் உள்ளது. நாம் புதிய மாறுபாடுகள் குறித்து பெறக்கூடிய அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
கோவிட்-19 இன் புதிய அறிகுறிகள்
உண்மையில் இந்த கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலை உலகை கடுமையாக பாதித்துள்ளது. வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கோவிட்-19 தொற்றுக்கு காரணமான வைரஸ் சில புதிய அறிகுறிகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் புதிதாக பரவி வருவதாக உலக சுகாதாரா அமைப்பு கூறியுள்ளது. மேலும் மற்ற ஓமைக்ரான் வகைகளில் இல்லாத வகையில் குழந்தைகளுக்கு ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் அறிகுறிகள் அதிகம் தென்படுவதாக கூறப்படுகிறது.
குழந்தை மருத்துவரும், Indian Academy of Pediatrics Committee-இன் முன்னாள் தலைவருமான டாக்டர் விபின் வசிஷ்தா புதிய ஆர்க்டரஸ் (Arcturus) வேரியன்ட் XBB.1.16 வேரியன்ட் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய வேரியன்ட் , இந்த புதிய வேரியன்ட்டின் அறிகுறிகள் அதிக காய்ச்சல், இருமல் மற்றும் கண் அரிப்பு, கண் சிவத்தல் ஆகியவை என்கிறார். இது பரவக்கூடிய வேரியன்ட் என்றும், தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய வேரியன்ட் என்றும், “கண்காணிப்பில் உள்ள வேரியன்ட்” என்றும் WHO அறிவித்து உள்ளது.
மேலும் RTI International இன் தொற்றுநோயியல் நிபுணரான ரிச்சர்ட் ரெய்திங்கர், “உண்மையிலேயே இந்த XBB.1.16 வேரியன்ட் வைரஸின் அறிகுறிகளின் தொகுப்பு மாறியிருக்கிறதா இல்லையா என்பது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவையாக உள்ளது”, என்று Fortune Journal-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஒரு கோவிட் அறிகுறியாக முன்னர் கண் எரிச்சல் அறிவிக்கப்பட்டிறிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண் பாதிப்புகளின் அறிகுறிகள்
கண்ணில் வலி அல்லது எரிச்சல், அரிப்பு, கண்ணில் நீர் வடிதல், சிவத்தல், வெளியேற்றம் மற்றும் கண்ணில் வீக்கம் ஆகியவை கண் எரிச்சல் அறிகுறிகள் மற்றும் கண் பாதிப்புக்கான அறிகுறிகள் ஆகும். கண்ணின் கண்ணீர்ப் படத்தில் வைரஸை அடையாளம் கண்டுள்ள Nebraska Medicine’s Truhlsen Eye Institute- ன் ஆராய்ச்சியாளர்கள் இது வெண்படலத்திற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிபிட்டுள்ளனர்.
இந்த எக்ஸ்பிபி.1.16 மற்றும் அதன் வேரியன்ட்கள் மற்ற கோவிட் வகைகளை விட மிகவும் வலுவானது எக்ஸ்பிபி.1.16 மற்றும் அதன் வேரியன்ட்கள் மற்ற கோவிட் வகைகளை விஞ்சும் திறனைக் கொண்டுள்ளன.
BA.2 இன் இரண்டு துணை வகைகளின் மறு இணைப்பு இந்த ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் ஆகும். TOKYO பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ப்ரீபிரிண்ட் ஆய்வில், “ இந்த ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, வேரியன்ட்டின், துணை வேரியன்ட்களான XBB.1 மற்றும் XBB.1.5 ஐ விட 1.17 முதல் 1.27 மடங்கு மிகவும் அதிகமான பரவும் தன்மையை கொண்டுள்ளது,” என்று கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் இது எதிர்காலத்தில் மிக வலுவானதாக பரவும் என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. மற்ற கோவிட் வகைகளோடு ஒப்பிடும்போது ஆண்ட்டிபாடிகளை எதிர்த்தும் வலுவானதாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்