System Intaker For PFRDA TRACE : NEC Corporation India-வை PFRDA அதன் டிஜிட்டல் தளமான PFRDA TRACE-ன் (SI) ஆக தேர்ந்தெடுத்துள்ளது

System Intaker For PFRDA TRACE :

PFRDA (Pension Fund Regulatory And Development Authority) ஆனது NEC Corporation India-வை அதன் டிஜிட்டல் தளமான PFRDA-TRACE-க்கான System Intaker-ராக (System Intaker For PFRDA TRACE) தேர்ந்தெடுத்துள்ளது. PFRDA-ன் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் NEC Corporation India-ஐ ஆறு வருட காலத்திற்கு System Intaker-ஆக தேர்ந்தெடுத்துள்ளது. இந்த PFRDA இன் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் NEC Corporation India ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pension Fund Regulatory And Development Authority (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) :

ஓய்வூதியத் துறையை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தால் ஒரு தீர்மானத்தின் மூலம் இடைக்கால ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆனது ஆகஸ்ட் 23, 2003 அன்று இந்தியாவில் நிறுவப்பட்டது. குறிப்பாக ஓய்வூதிய நிதியின் சந்தாதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஓய்வூதிய நிதியை நிறுவுதல், மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்கு முதியோர் வருமான பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகும்.

PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய அமைப்பை (NPS - National Pension System) ஒழுங்குபடுத்துகிறது :

கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்திய அரசால் பங்களிப்பு ஓய்வூதிய முறையானது அறிவிக்கப்பட்டது. அது தற்போது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2004 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 19, 2013 அன்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் (PFRDA) நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 1, 2014 அன்று அறிவிக்கப்பட்ட இந்த PFRDA ஆனது NPSஐ ஒழுங்குபடுத்துகிறது. இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், NPS, மத்திய மற்றும் மாநில தன்னாட்சி அமைப்புகளை ஏற்றுக்கொண்ட மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து குடிமக்களால் சந்தா ஆனது செலுத்தப்படுகிறது. PFRDA ஓய்வூதிய சந்தையின் ஒழுங்கான வளர்ச்சியை உறுதி செய்கிறது. PFRDAக்கு தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆனது நான்கு தொகுதிகளைக் கொண்டிருக்கும்.

  • இணையதள மறுசீரமைப்பு மற்றும் சாட்போட் PFRDA ஆன்லைன் இடைத்தரகர் மேற்பார்வை இயந்திரம் (POISE)
  • PFRDA களஞ்சியம் மற்றும் தகவல் அமைப்புகள் மேலாண்மை
  • தரவு மற்றும் பகுப்பாய்வு தளம் (PRISM)
  • PFRDA இன்ட்ராநெட் – உள் டிஜிட்டல் மயமாக்கல் (PINTRA)

Latest Slideshows

Leave a Reply