T20 World Cup Schedule 2024 : T20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு

T20 World Cup Schedule 2024 :

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என (T20 World Cup Schedule 2024) ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. முதல் போட்டி ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில், ஒவ்வொரு குழுவும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த குரூப் போட்டிகள் மட்டும் ஜூன் 1 முதல் ஜூன் 18 வரை நடைபெறும் (T20 World Cup Schedule 2024) என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் அரையிறுதியும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் (T20 World Cup Schedule 2024) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று ஆட்டங்கள் அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான போட்டி ஜூன் 5-ம் தேதி நியூயார்க் மைதானத்திலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

அதேபோல் ஜூன் 12-ம் தேதி இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதும் போட்டியும், ஜூன் 15-ம் தேதி இந்தியா-கனடா அணிகள் புளோரிடாவில் விளையாடும். அதேபோல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இரவு 8.30 மணிக்கு தொடங்கும். மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இரண்டிற்கும் ரிசர்வ் நாள் உள்ளது. A1, B2, C1 மற்றும் D2 என அணிகள் பிரிக்கப்பட்டு, இரண்டாவது சுற்றுக்கு A2, B1, C2 மற்றும் D1 என பிரிக்கப்பட்டுள்ளது, இது சூப்பர் 8 சுற்று என பார்க்கப்படுகிறது. முதல் அரையிறுதிப் போட்டி கயானாவிலும், இரண்டாவது அரையிறுதி டிரினிடாட்டிலும், இறுதிப் போட்டி பார்படாஸிலும் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply