Takkar Teaser Released: டக்கர் படத்தின் டீசர் வெளியீடு

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள “டக்கர்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சித்தார்த் தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள படம் ‘டக்கர்’. ‘கபால்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கெளஷிக், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா இசைமைத்துள்ளார்.

காதல், ரொமான்ஸ் மற்றும் ஆக்‌ஷன் நிரம்பிய தருணங்களுடன், அடுத்த தலைமுறை குழுக்களின் நலன்களை ஈர்க்கும் கூறுகளுடன் கூடிய இளமைக் கால பொழுதுபோக்கின் இறுதி விருந்தை படத்தின் பார்வை அளிக்கிறது. நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. நேற்று சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அருண்குமார் இயக்கம் சித்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார்.

டக்கர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து நீண்ட நாட்களாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று 6 மணிக்கு வெளியானது. இப்படத்தில் சித்தார்த் குறுந்தாடியுடன் கல்லூரி பாய் போல் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த படம் வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply