Tallest BR Ambedkar Statue : அமெரிக்காவின் வாஷிங்டனில் Dr B R Ambedkar சிலை திறக்கப்பட்டது.

Tallest BR Ambedkar Statue : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய Dr B R Ambedkar சிலை திறக்கப்பட்டது.

இந்தியாவுக்கு வெளியே அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மேரிலாண்ட் புறநகர் பகுதியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய  டாக்டர் BR அம்பேத்கரின் மிக உயரமான சிலை (Tallest BR Ambedkar Statue) 15/10/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முறையாக திறக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி டாக்டர் BR அம்பேத்கர் ஆவார். டாக்டர் BR அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல், தலித்துகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், மற்றும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் மற்றவர்களின் நலனுக்காகப் போராடியவர்களில்  குறிப்பிடத்தக்கவராக கருதப்படுகிறார்.

BR அம்பேத்கரது பணி ஆனது பல சமூக இயக்கங்களை வழிநடத்துவதையும்,  மற்றும் இந்த விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் வரலாற்று அநீதிகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது ஆகும். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 டாக்டர் BR அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவிய அதே அக்டோபர் 14 நாளில்தான் சிலை திறக்கப்பட்டு  உள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும். இந்திய-அமெரிக்கர்கள் சுமார் 500 பேர்கள் மேரிலாந்தின் புறநகர்ப் பகுதியில் கூடி சிலையை முறையாகத் திறந்து வைத்தனர். பங்கேற்பாளர்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் கனமழை மற்றும் தூறல் ஆகியவை தடுக்கவில்லை.

“சமத்துவத்தின் சிலை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்டர் BR அம்பேத்கர் சிலை ஆனது இந்தியாவின் தெற்கு ஹைதராபாத் நகரில் 125 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையின் பிரதி ஆகும். இந்த 19-அடி உயர டாக்டர் BR அம்பேத்கர் சிலையை புகழ்பெற்ற கலைஞரும் சிற்பியுமான ராம் சுதார் செதுக்கி உள்ளார். இந்த ராம் சுதாரால் என்ற சிற்பி இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் படேலின் சிலையை குஜராத்தில் செதுக்கிய சிற்பி ஆவார். இந்த சர்தார் படேலின் சிலை ஆனது ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. மேலும்  இந்த சர்தார் படேலின் சிலை ஆனது குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு அடியில் உள்ள நர்மதா தீவில் நிறுவப்பட்டு உள்ளது.

Tallest BR Ambedkar Statue : சிலை திறப்பு விழாவில் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் (ஏஐசி) தலைவர் ராம் குமார், “நாங்கள் டாக்டர் BR அம்பேத்கரின் சிலையை சமத்துவத்தின் சிலை என்று அழைக்கிறோம். இந்த சமத்துவமின்மை பிரச்சனை ஆனது இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் அம்பேத்கரிய இயக்கத்தை வழிநடத்தும் நியூயார்க்கைச் சேர்ந்த தீலிப் மஸ்கே, “இந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் சமத்துவத்தின் சிலை (Tallest BR Ambedkar Statue) ஆனது 1.4 பில்லியன் இந்தியர்களையும் 4.5 மில்லியன் இந்திய அமெரிக்கர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று கூறினார்.

தலித் இந்திய வர்த்தக சங்கத்தின் தேசியத் தலைவர் ரவி குமார் நர்ரா, “முன்பு டாக்டர் BR அம்பேத்கர் ஒரு தலித் தலைவராக மட்டுமே நடத்தப்பட்டார். ஆனால் இப்போது ஒட்டுமொத்த தேசமும் அவரது பெண் மற்றும் விளிம்புநிலை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான பங்களிப்பை அங்கீகரிக்கிறது. டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த மிகப் பெரிய பொருளாதாரக் கொள்கை இப்போது யதார்த்தமாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply