Tamannaah Latest Tweet: 'என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது'...

ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நடிகை தமன்னா ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்னன், மோகன் லால், சுனில், சிவராஜ் குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர வரவுள்ளது, அனிருத் இசையமைத்த பாடல்களின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் உருவான ‘காவாலா’ பாடல் வெளியிடப்பட்டது.

பட்டி தொட்டி எங்கும் எல்லா இடங்களிலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது, மேலும் இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. இதில் தமன்னாவின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பாடல் ரசிகர்களால் தொடர்ந்து ரீல்ஸ் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தமன்னாவின் நடனத்தை வேறு பாடல் வரிகளுடன் சிங்க் செய்தும் நடனமாடியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ‘காவாலா’ பாடலுக்கு ரீலிஸ் செய்துள்ள குழந்தைகளின் வீடியோவை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமன்னா இதில் “காவாலா’ பாடலுக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த அன்பும் ஆதரவும் மனதை நிறைவு செய்துள்ளது. அன்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply