Tambaram-Chengalpattu Bridge: ரூ. 3,523 கோடி மதிப்பீட்டில் 27 கி.மீ., தூரத்திற்கு கட்டப்பட மேம்பாலப் பணி

சென்னை பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடியில் முடிவடையும்  இந்தப் பாலப் பணியை அடுத்த சில மாதங்களில் NHAI தொடங்க உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த மேம்பாலத்தில் எளிதாக செல்ல முடியும். பாலம் கட்டும் பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையம், பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரி மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி இடையே நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் இந்த பாலம் கொண்டிருக்கும். தற்போதுள்ள  செங்கல்பட்டு-திண்டிவனம் ஜிஎஸ்டி சாலை  4 வழிச் சாலை ஆகும்.  இருபுறமும் சர்வீஸ் ரோடுகளுடன்  இது 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்

தினமும் சராசரியாக 1.53 லட்சம் வாகனங்கள் இங்கு செல்வதால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரூ.3,458 கோடி செலவில் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னைவாசிகளுக்கு தாம்பரம்-செங்கல்பட்டில்  27 கிமீ பாலம் விரைவில் வருகிறது

Latest Slideshows

Leave a Reply