Tambaram Corporation Budget Announcement : தாம்பரம் மாநகராட்சி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பு

சென்னை தாம்பரத்தில் பொதுவாக வாகன நிறுத்தம் என்று எங்குமே தனியாக ஒரு இடம் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. அதே போல பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. ஆனால் தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் தனியாக நான்கு சக்கர வாகன (Tambaram Corporation Budget Announcement) நிறுத்தங்கள் இல்லை. இதனால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மக்கள் கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர். இதனால் தாம்பரம் மற்றும் பல்லாவர பகுதிகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்தப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் GST சாலையில் ரூ.10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் ஒன்று அமைக்கப்படும் என்று தாம்பரம் பட்ஜெட்டில் இன்று (Tambaram Corporation Budget Announcement) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் வசந்தகுமாரி தலைமையில் இன்று (07.03.2025) நடைப் பெற்ற தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு (Tambaram Corporation Budget Announcement)

Tambaram Corporation Budget Announcement - Platform Tamil

நிதிக் குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாம்பரம் மாநகராட்சி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

● பசுமை புல் வெளி விளையாட்டு திடல்கள் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 கோடியில் 5 மண்டலங்களிலும் அமைக்கப்படும்.

●மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் இளைஞர்களுக்கான போட்டித் தேர்வுகள், உயர் கல்வி பயில்வதற்காக ரூ.3 கோடியில் அதிநவீன படிப்பகம் (Tambaram Corporation Budget Announcement) தாம்பரம் மாநகராட்சியில் உருவாக்கப்படும்.

● தாம்பரம் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ரூ.11 கோடியில் நவீன உணவகம் கட்டப்படும்.

● தாம்பரம் பகுதியில் ஏரிகள் புனரமைப்பு பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.

●ரூ.3 கோடியில் தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகளில் (Tambaram Corporation Budget Announcement) நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும்.

● ரூ.1 கோடியில் தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்

● மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளதால் ரூ.10 கோடியில் ஸ்மார்ட் சாலையாக மாற்றப்படும்.

●பொதுமக்கள் எளிதில் தங்கள் வரியை செலுத்த ஏதுவாக ரூ.25 லட்சத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம் வாங்கப்படும்.

● பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அறியும் வகையில் நவீன முறையில் தாம்பரம் மாநகராட்சிக்கு என ரூ.20 லட்சத்தில் புதிய வலைத்தளம் உருவாக்கப்படும்.

● தாம்பரம் GST சாலையில்போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

● ரூ.1 கோடியில் குழந்தைகள் எல்லாம் சாலை விதிகள் மற்றும் சாலை ஒழுங்கு முறைகளை கற்றுக்கொள்ளும் நோக்கில் ரூ டிராபிக் பார்க் அமைக்கப்படும்.

71 முக்கிய அம்சங்கள் 1,082 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply