Tamil Nadu Agriculture Budget 2024 : தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25 சிறப்பு அம்சங்கள்

சட்டப்பேரவையில் அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் 20/02/2024 நேற்று காலை 10 மணியளவில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை (Tamil Nadu Agriculture Budget 2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஆனது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் ஆகும்.

Tamil Nadu Agriculture Budget 2024 :

  • இலவசமாக 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் ஆனது வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2,00,000 விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்களை வழங்க 7.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு 2024 ஆம் ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் ஆனது வழங்கப்படும்.
  • மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.3 கோடி ஆனது எள் சாகுபடியை அதிகரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 15,280 வருவாய் கிராமங்களில் “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய ஆய்வகம் ஆனது அமைக்கப்படும்.
  • தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் கன்னியாகுமரியில் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.3.64 கோடி நிதி ஆனது வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.2.70 கோடி மானியம் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
  • கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடியும் மற்றும் சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடியும் நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.1775 கோடி நிதி ஆனது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.42 கோடி நிதி ஆனது 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.36 கோடி நிதி ஆனது ‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.27 கோடி நிதி ஆனது 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை அமைப்பதற்காக ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு ஊக்கத்தொகையுடன் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்பட உள்ளது.
  • ரூ.3.36 கோடி நிதி ஆனது முந்திரி சாகுபடியை அதிகரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.50 லட்சம் நிதி ஆனது நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் ஆனது உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

Latest Slideshows

Leave a Reply