Tamil Nadu Artificial Intelligence Mission ஆனது தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Tamil Nadu Artificial Intelligence Mission
தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பில் புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வை தீவிரமாக செய்து வருகிறது. முதலமைச்சரின் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ (Tamil Nadu Artificial Intelligence Mission) ஆனது தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Tamil Nadu Artificial Intelligence Mission ஆனது கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து வரையறைகளைத் தெளிவாக வகுத்திட செயல்படும். இந்த தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் (Tamil Nadu Artificial Intelligence Mission), தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி பேராசிரியர்கள், மின்னணு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இடம் பெற நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு 19/02/2024 அன்று தாக்கல் செய்த தமிழ்நாடு பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது
E-office விரிவுபடுத்த ரூ.30 கோடி
2024-25 ஆம் நிதியாண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.30 கோடி ஆனது பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்கள் மற்றும் சார்பு அலுவலகங்களுக்குத் தேவையான மென்பொருள் மற்றும் கணினிகள் வழங்கவும், அலுவலர்களுக்கு உரியத் திறன் பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை (E-office) விரிவுபடுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில தரவு மையத்தை (State Data Centre) உயர்த்த ரூ.200 கோடி
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT – Electronics Corporation Of Tamil Nadu) மூலமாக, அரசு சார் இணையவழிச் சேவைகளைத் துரிதமாக அளித்திடும் வகையில் 5 ஆண்டுகளில், பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன், மேகக் கணினி கட்டமைப்பு கொண்டதாக, மாநில தரவு மையத்தை (State Data Centre) உயர்த்த ரூ.200 கோடி ஆனது ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள்
சென்னையில் உள்ளது போல இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தைப் பரவலாக்கும் வகையில், மதுரை, திருச்சி, கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் தகவல் தொழில்நுட்பத்தில் இணைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.
- மதுரையில் ரூ.350 கோடியில் 6 இலட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்,
- திருச்சியில் ரூ.45 கோடியில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்,
- வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைப்பதற்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உயர்த்த ரூ.10 கோடி
விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உயர்த்த கோவை விளாங்குறிச்சியில், 20 லட்சம் சதுர அடியில், இரண்டு கட்டங்களாக அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி, மற்றும் பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்.
Latest Slideshows
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
GOAT Box Office Day 1 : கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்