Tamil Nadu Budget 2024 Updates : 2024 - 2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் புதிய அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2024 Updates :
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2024 – 2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் (Tamil Nadu Budget 2024 Updates) புதிய அறிவிப்புகள். அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையின் புதிய அறிவிப்புகள்,
- தமிழகத்தில் 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்.
- ரூ.25 கோடியில் மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் ஆனது அமைக்கப்படும்.
- விபந்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ், உயர்த்தப்படும்.
- அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆனது வழங்கப்படும். June 2024 மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் ஆனது நிரப்பப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களின் பேச்சு, பாட்டு, இசை மற்றும் நடன கலைத் திறமைகளை வெளிக்கொணர முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் மூலம் போட்டிகள் நடத்தப்படும்.
- சென்னை முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் புறவழிச் சாலைகள் 14 இடங்களிலும் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்களும் ரூ.665 கோடியில் அமைக்கப்படும்.
- சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை மற்றும் திண்டுக்கல் நகருக்கு புறவழி சாலை அமைக்கப்படும்.
- ரூ.100 கோடி நிதி ஆனது 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
- மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் (ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும்).
- மெட்ரோ சேவையை பரந்தூர் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
- பழங்குடியினத்தவரை மேம்படுத்த தொல்குடி என்கிற திட்டம் ரூ.1,000 கோடி செலவில் (Tamil Nadu Budget 2024 Updates) நடைமுறைப்படுத்தப்படும்.
- விண்வெளி பூங்கா ஆனது குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும்.
- விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா ஆனது தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும்.
- நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் ஆனது தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்த அறிமுகம் செய்யப்படும்.
- அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் ஆனது மேம்படுத்தப்படும்.
- 3,000 புதிய பேருந்துகள் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும்.
- ரூ.56 கோடி மதிப்பில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்படும்.
- மருத்துவத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு.
- ரூ.440 கோடி நிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
- ரூ.35,000 கோடி நிதி ஆனது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க ஒதுக்கீடு செய்யப்படும்.
- கரையோர பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
- இலவச Wifi வசதிகள் ஆனது சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் அமைக்கப்படும்.
- 6 இடங்களில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
- புற்றுநோய் மேலாண்மை இயக்கம் ஆனது அமைக்கப்படும்.
- ஒலிம்பிக் அகாடமிகள் 4 நகரங்களில் நிறுவப்படும்.
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்