Tamil Nadu Cultures : வெளிநாட்டு மக்கள் நம் தமிழகத்தை நேசிக்க இவ்வளவு காரணங்களா?

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிறைய மக்கள் தமிழகத்திற்கு வருகை தருவது உண்டு. பெரும்பாலான மக்கள் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்தில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக கூறியிருக்கின்றார்கள். இங்கு அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியுடனும் இருப்பதாகவும் உணர்கின்றனர். இவர்கள் நம் தமிழகத்தை விரும்புவதற்கு (Tamil Nadu Cultures) பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

Tamil Nadu Cultures - நம் கலாச்சார பாரம்பரியம்

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்னரே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பல்வேறு விதமான கவிஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் விஞ்ஞானிகள் தமிழகத்திற்கு (Tamil Nadu Cultures) வந்துள்ளனர். இதனால்தான் திராவிட கட்டிடக்கலை பிறந்த இடம் என்று தமிழ்நாட்டை வர்ணிக்கின்றனர். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் மகாபலிபுரம் கோயில்கள். அந்த காலத்தில் ஆண்டு வந்த பல்லவ அரசன் மகேந்திரவர்மன் பல அசர வைக்கும் கோயில்களை கட்டி உள்ளார். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என்று தமிழர்களின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. இவ்வாறு பிரமிக்க வைக்க கூடிய கோவில் கட்டிடக்கலையை தமிழர்கள் அந்த காலத்திலேயே அறிந்து வைத்துள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரமிக்க வைக்க கூடிய அளவில் கட்டப்பட்டிருக்கும்.

இயற்கை சுற்றுலாத் தலங்கள்

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இவைகள் தான் நம் தமிழ்நாட்டிற்கு அழகு சேர்ப்பவை என்று நினைத்தால் அதைவிட கண்ணைக் கவரும் அழகிய கிராமங்களும் இயற்கை சமவெளிகளும் நம் தமிழகத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. மிகவும் இயற்கைக்கு பிரபலமான கொடைக்கானல், ஊட்டி, கொல்லிமலை, மேகமலை என்று இயற்கை வர்ணிக்கும் சுற்றுலாத்தலங்கள் ஏராளம்.

அறுசுவை உணவுகள்

தமிழ்நாட்டின் அறுசுவை உணவு என்றாலே அது உலக அளவில் பிரபலமான ஒன்று என்று கூறலாம். என்னதான் உலகத்தை சுற்றி பல்வேறு விதமான புதிய உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் நம்ம ஊர் சாம்பார், இட்லி, பொங்கல், வடை, பாயாசம் முன்னாள் எதுவுமே நிற்க முடியாது என்று தான் கூறலாம். நம்ம ஊர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிநாடு மக்கள் கூட நம் தமிழக உணவிற்கு அடிமையாகி விடுகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்

மேலே கூறிய அனைத்தையும் விட மிகவும் முக்கியமான ஒன்று பாதுகாப்பு. சுற்றுலாவிற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் தாங்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் மற்றும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக உணர்கின்றனர். இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் நம் தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கின்றது. இங்கே வருகை தரும் சுற்றுலா பயணிகள் முகம் தெரியாத நபர்களாக இருந்தாலும் அவர்களை மிகவும் பாசமாகவும் மரியாதையுடனும் நம் தமிழக மக்கள் நடத்தி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் மதிப்பாக நடத்தப்பட்டு வருவதாக நிறைய சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply