Tamil Nadu Economy New Peak With 9.69% Growth : பொருளாதாரத்தில் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு

இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம் (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth) பெற்றுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரமானது சுமார் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி துறை ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சி (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth)

கடந்த 2023-24-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி துறையானது 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த நிலையில் தற்போது 9.69% சதவீதம் அதிகரித்து பெரும் உச்சத்தை (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth) கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதை விட கூடுதலாக 9.69 சதவீதம் வளர்ச்சியை பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. 

2024-25-ம் நிதியாண்டில் சேவைகள் துறை அதிகபட்சமாக 12.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மனை வணிகம் 13.6 சதவீதமும், தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறை 13 சதவீதமும், வர்த்தகம் மற்றும்  பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7 சதவீதமும், உற்பத்தி துறை 8 சதவீதமும், கட்டுமானம் 10.6 சதவீதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மேலும் பயிர்த் தொழில் -5.93 சதவீதம், கால்நடை வளர்ப்பு துறை 3.84 சதவீதம் என குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் தமிழ்நாடு இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லை. இதேபோல் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையிலும் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth) உச்சம் தொட்டுள்ளதை பொருளாதார வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Tamil Nadu Economy New Peak With 9.69% Growth - Platform Tamil

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth) நாம் எட்டியுள்ளோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நிலையான நிர்வாகம், அடிப்படைகளில் உறுதி, தெளிவான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றுடன் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது எனவும், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவு

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2024-25-ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% ஆகும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்திற்கு (Tamil Nadu Economy New Peak With 9.69% Growth) இடையே இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் 14.02% ஆகும். திராவிட மாடல் ஆட்சியின் மூலம் இந்த பெருமையை அடையச் செய்த முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply