Tamil Nadu Global Investors Meet 2024 : கோயம்புத்தூருக்கு 2 முக்கிய முதலீடுகள் கிடைத்துள்ளன

கோயம்புத்தூர் ஆனது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. Tamil Nadu Global Investors Meet 2024 கோயம்புத்தூருக்கு 2 முக்கிய முதலீடுகள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனது உற்பத்தி துறையை விட (Production Industries) Technology மற்றும் IT சேவை துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பெங்களூர்க்கு மாற்றாக கோயம்புத்தூர்-ஐ பல வெளிநாட்டு நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. கோயம்புத்தூரில்  IT துறையினருக்கு ஏற்றார் போல் Climate Conditions, திறன்வாய்ந்த ஊழியர்கள், கல்வி கட்டமைப்பு, அடுத்த 20 வருடத்திற்குத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய படித்த பட்டதாரிகள் வளம் என சிறப்பான பொருத்தமும் பாக்கவாக இருக்கும் நகரமாக அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமாகக் கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் விலைவாசி மிகவும் குறைவு என்பது மிகப்பெரிய சிறப்பான விஷயம் ஆகும்.

Tamil Nadu Global Investors Meet 2024 - 2 முக்கிய முதலீடுகள் :

கோயம்புத்தூரில் ZF விண்ட் டர்பைன் 750 கோடி முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது  2வது நாள் Tamil Nadu Global Investors Meet 2024 கூட்டத்தில் கையெழுத்தானது. தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ZF விண்ட் டர்பைன் 08/01/2024 அன்று 2வது நாள் Tamil Nadu Global Investors Meet 2024 கூட்டத்தில் நிறைவேற்றியது. கோயம்புத்தூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் KGISL என்ற நிறுவனம் ஆனது தமிழ்நாடு அரசாங்கத்துடன் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் IT டெக் பார்க் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் கோயம்புத்தூரில் தற்போது IT பார்க், பெரிய அலுவலகங்கள் கட்டுமானங்கள் ஆனது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த IT பார்க் மூலம் புதிய IT நிறுவனங்கள் தங்களுடைய அலுவலங்களை அமைக்க முடியும்.

இந்த முதலீடுகள் மூலம் கோயம்புத்தூரில் வேலைவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். கோயம்புத்தூரில் தற்போது  மெட்ரோ, சாலை விரிவாக்கம், பாலம், விமான நிலைய விரிவாக்கம் என பல திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதால் கோவை மாநகரின் உள்கட்டமைப்பு ஆனது வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்றுமதி சார்ந்த முதலீடுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் Tamil Nadu Global Investors Meet 2024 கூட்டத்தில் கோவை மற்றும் மதுரையில் கணிசமான முதலீடுகளே வந்துள்ளதாகத் தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply