Tamil Nadu Government Awards Announcement : 2015 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில், 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் (Tamil Nadu Government Awards Announcement) அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக தனி ஒருவன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறந்த நடிகராக மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில், 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்திற்கும், இரண்டாம் பரிசு பசங்க-2 படத்திற்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்திற்கும், பெண்களை உயர்வாக சித்தரித்த படத்திற்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே படத்திற்கும் (Tamil Nadu Government Awards Announcement) அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Awards Announcement :

இந்நிலையில், சிறந்த நடிகராக ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த நடிகர் ஆர்.மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ’36 வயதினிலே’ படத்துக்காக சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது ‘வை ராஜா வை’ படத்திற்காக கவுதம் கார்த்திக்கிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக ரித்திகா சிங்கிற்கு வழங்கப்படுகிறது. ‘திருட்டுக் கல்யாணம்’ படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகையாக தேவதர்ஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வில்லன் நடிகராக ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமியும், சிறந்த கதாசிரியராக ‘தனி ஒருவன்’ படத்திற்காக மோகன்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜிப்ரான் பெற்றுள்ளார். ‘தனி ஒருவன்’ படத்திற்காக ராம்ஜி சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றார். தமிழக அரசின் திரைப்பட விருதுகள், தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டிஎன்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி, விருது பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை, நினைவு பரிசு மற்றும் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவார். இந்த தகவல் (Tamil Nadu Government Awards Announcement) அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply